ஷாக்கிங்: சசி ஷாப்பிங் செல்ல உடந்தையாக இருந்த அதிகாரிக்கு சிறை தலைமை புரமோஷன் கொடுத்த கர்நாடக அரசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சசிகலா ஷாப்பிங் செல்ல உடந்தையாக இருந்த பெண் அதிகாரிக்கு புரமோஷன் கொடுத்துள்ளது கர்நாடக அரசு.

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் தலைமை கண்காணிப்பாளராக பதவி வகித்த கிருஷ்ணகுமார் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு புதிதாக எந்த பதவியும் ஒதுக்கப்படவில்லை.

சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா கொடுத்த குற்றச்சாட்டு அறிக்கை லீக்கானதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

அதிகாரி அனிதா

அதிகாரி அனிதா

ஆனால் உண்மையில், சசிகலாவின் விதிமீறலுக்கு அதிக உடந்தையாக இருந்தது அச்சிறையில் கிருஷ்ணகுமாருக்கு அடுத்த நிலையில் இருந்த, அதாவது கண்காணிப்பாளராக இருந்த அனிதாதானாம்.

பதவி உயர்வு

சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபாவை பணியிடமாற்றம் செய்த கர்நாடக அரசு, முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த அனிதாவுக்கு அதே சிறையில் பதவி உயர்வு கொடுத்து கவுரவித்துள்ளது.

நடந்து வரும் அனிதா

நடந்து வரும் அனிதா

பிரஜா டிவி என்ற கன்னட செய்தி சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஷாப்பிங் சென்று திரும்பும் காட்சியுள்ளது. அவர்களோடு சேர்ந்து நடந்து வருவது அப்போது கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்த அனிதா என்று டிவி செய்தியில் கூறப்படுகிறது.

Sasikala walking with wearing nighty dress, leaked video reveals-Oneindia Tamil
கைதிகள் போராட்டம்

கைதிகள் போராட்டம்

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட அனிதாவுக்குதான், தெரிந்தோ, தெரியாமலோ பதவி உயர்வு வழங்கியுள்ளது கர்நாடக அரசு. கிருஷ்ணகுமார் மாற்றப்பட்டு அந்த பதவிக்கு அனிதா நியமிக்கப்பட்ட நிலையில், நேற்றே சிறைக்குள் கைதிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். அனிதாவும் குற்றங்களுக்கு உடந்தையானவர், ஊழல் பேர்வழி என கைதிகள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka government giving promotion to the woman police officer who allegedly involving fraud with Sasikala, says a Kannada tv channel.
Please Wait while comments are loading...