முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி போட்ட தடை.. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
Recommended Video
கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருக்கும் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 வாரமாக அங்கு இஸ்லாமிய மாணவிகள் சிலர் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
கர்நாடகாவில் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை இந்து மாணவர்கள், மாணவியர் எதிர்க்க தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மங்களூரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ , மாணவியர் சிலர் காவி உடை அணிந்து வந்தனர்.

ஹிஜாப்
இதே சம்பவம் சிக்மங்களூரில் இருக்கும் இன்னொரு கல்லூரியிலும் நடைபெற்றது. இதனால் கர்நாடகாவில் இருக்கும் பெரும்பாலான கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடகாவில் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அரசு பியு கல்லூரிகளில் மாணவ, மாணவியர் ஹிஜாப், காவி துண்டு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி
கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருக்கும் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய உடை விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஹிஜாப் அணிய தடை இதனால் அங்கு இஸ்லாமிய மாணவிகள் சிலர் கடந்த 3 வாரமாக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். மூன்று வாரமாக 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதியில் இருந்து இவர்கள் "ஆப்சென்ட்" என்று வகுப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகள்
ஹிஜாப்பை அகற்றினால்தான் இவர்களை அனுமதிப்போம் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இது தொடர்பாக மாணவிகள் அளித்த பேட்டியில், நாங்கள் எங்கள் உரிமைகளைதான் கடைபிடிக்கிறோம். எங்களை மிரட்டுகிறார்கள். நாங்கள் ஹிஜாப் அணிய கூடாது என்று கூறுகிறார்கள். நாங்கள் கல்லூரிக்குள் வந்தும் எங்களுக்கு ஆப்சென்ட் போடுகிறார்கள். அதோடு நாங்கள் வேண்டுமென்றே லீவ் போட்டதாக லெட்டரில் பொய்யாக எழுதி கொடுக்க சொல்கிறார்கள். எழுதி கொடுக்க முடியாது என்றால் உங்களுக்குத்தான் பிரச்சனை என்றும் மிரட்டுகிறார்கள் என்று மாணவியர் குறிப்பிட்டுள்ளனர்.

உடை
''மாணவிகள் சிஎப்ஐ என்று இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள்தான் வேண்டும் என்றே பிரச்சனை செய்கிறார்கள். இங்கே ஏற்கனவே 150 சிறுபான்மையினர் படிக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்படி புகார் கொடுக்கவில்லை. இவர்கள் வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்'' என்கிறார் கல்லூரி முதல்வர். ''இது உடை சுதந்திரம். இந்து பெண்கள் பொட்டு வைத்து வருகிறார்கள். மத உரிமை கிறிஸ்துவ பெண்கள் ஜீசஸ் மாலை அணிந்து வருகிறார்கள். சிலர் பூணூல் அணிந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது இஸ்லாமிய பெண்கள் அவர்களின் உடைகளை அணிவதில் என்ன தவறு இருக்க முடியும்'' என்று இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.

நீதிமன்றம்
இந்த நிலையில், உடுப்பி கல்லூரி மாணவி ஒருவர், ஹிஜாப் அணிந்து வர அனுமதி கொடுக்க வேண்டுமென்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த மனுவில், இந்திய அரசியலமைப்பு பிரிவு 14 மற்றும் பிரிவு 25-ன் படி ஹிஜாப் அணிவது ஒருவரின் அடிப்படை உரிமை. இந்திய அரசியலமைப்பு எந்தவொரு மனிதரும் தன் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் உரிமையை உறுதி செய்கிறது. மதம் சம்பந்தமான நடவடிக்கைகள் பொது ஒழுங்கு, சட்டம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளை உள்ளடக்கியிருந்தால் மட்டுமே அது மாநில உரிமை தலையிடக் கூடியது'' என்று மாணவி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் செவ்வாய்கிழமையன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications