டி.எஸ்.பி. தற்கொலை விவகாரம்... கர்நாடக அமைச்சர் ஜார்ஜ் ராஜினாமா
பெங்களூர்: கர்நாடக காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அமைச்சர் ஜார்ஜ் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் ராஜினாமா செய்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி (51). இவர் கடந்த 7-ம்தேதி, தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துக்கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது பணியில் அமைச்சர் ஜார்ஜ் அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். தன் மீது ஊழல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் செய்ததாக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தப் போவதாக அமைச்சர் ஜார்ஜ் மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் மிரட்டியதாக தெரிவித்தார்.
ஜார்ஜ் உள்துறை அமைச்சராக இருந்தபோது போலீஸ் தூறை அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் சி.பி.ஐ. விசாரணை கோரி போராட்டம் நடத்தின. மேலும் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுடபடப்போவதாக அறிவித்திருந்தன.
இதனிடையே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என போலீஸ் அதிகாரி கணபதியின் மகன் கர்நாடக நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து அமைச்சர் ஜார்ஜ் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அமைச்சர் ஜார்ஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications