For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாய்களுக்கு போடுவதை போல பசியால் தவித்த மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கியெறிந்த அமைச்சர்!

வெள்ளத்தில் பசியால் வாடிய மக்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த அமைச்சருக்கு சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பசியால் தவித்த மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கியெறிந்த அமைச்சர்!

    பெங்களூரு: வெள்ளத்தில் பசியால் வாடிய மக்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த அமைச்சருக்கு சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    தீவிரம் அடைந்த தென் மேற்கு பருவமழை போதும் போதும் என்னும் அளவுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் கொட்டித் தீர்த்துள்ளது. கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதால், மாநிலமே வெள்ளத்தின் நடுவில் தத்தளித்து வருகிறது.

    இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, உண்ண உணவு கூட இன்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகிறது.

    கர்நாடகாவிலும் பாதிப்பு

    உணவு உடைமையின்றி தவித்து வரும் மக்களுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. இது போல் கர்நாடகாவிலும் வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    பிஸ்கட் பாக்கெட்டுகள் வீச்சு

    பிஸ்கட் பாக்கெட்டுகள் வீச்சு

    இந்த நிலையில் அவர்களை சந்தித்து உணவு வழங்க சென்ற கர்நாடக அமைச்சர் எச்.டி ரேவண்ணா எதோ நாய்களுக்கு ரொட்டி துண்டுகளை தூக்கி வீசுவதை போல, பொதுமக்களை நோக்கி பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி வீசியுள்ளார்.

    கடும் கண்டனம்

    கடும் கண்டனம்

    இதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அவருடைய இந்த மனிதாபிமானற்ற செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பேப்பர் படித்த குமாரசாமி

    பேப்பர் படித்த குமாரசாமி

    வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பாதித்த பகுதிகளை விட்டு விட்டு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சர்சையில் சிக்கிய அண்ணன்

    சர்சையில் சிக்கிய அண்ணன்

    இந்நிலையில் முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா இந்த நடத்தை மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சையில் சிக்கிய இருவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karnataka minister throwing biscuit pockets to pubilc in the camps. Public who affected by flood in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X