கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு.. காவேரி கரையோர மக்களே உஷார்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கர்நாடகாவில் நீர்திறப்பு அதிகரிப்பு...தமிழக காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை- வீடியோ
பெங்களூர்: கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக காவேரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை, கேஆர்எஸ் அணையில் இருந்து, 1,20000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல், மேட்டூர் அணையை வந்தடையும். எனவே தமிழக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து அதிகபட்சமாக இரண்டரை லட்சம் கன அடி நீரை திறக்கப்படும் வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார். கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் வருவதால், காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications