பெங்களூர் அருகே ஓடும் ரயிலில் தொங்கிய வாலிபருக்கு நேர்ந்த கதி.. பதற வைக்கும் வைரல் காட்சி
Recommended Video

பெங்களூர்: ஓடும் ரயிலில் தொங்கியபடி சாகசம் செய்த இளைஞர், கை நழுவி கீழே விழுந்து அடிபடும் காட்சிகள் செல்போனில் வீடியோவாக ரெகார்ட் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பெங்களூர் அருகே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நான்டட்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ கர்நாடகாவில் வைரலாக பரவியது. இப்போது நாடு முழுக்க பரவி வருகிறது.

சுமார் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயில் பெட்டியின் பக்க வாட்டில் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி சாகசம் செய்கிறார். இதை சக பயணிகள், நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இதனால் ஆர்வத்தோடு இதை அவர் செய்து வந்தார். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு கை நழுவி அவர் கீழே விழுகிறார். விழுந்த வேகத்தில், பக்கவாட்டில் உடல் இழுத்து செல்லப்படுகிறது. அங்கே ஒரு பாறையும் காணப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அந்த வாலிபர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை ரயில் சக்கரங்களுக்குள் அவர் சிக்கியிருந்தால், நினைத்து பார்க்க முடியாத சோகம் அரங்கேயிருக்கும்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் ரயில் பயணிகள், அவசர கால சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தாமல் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததும் பொறுப்பற்ற தன்மையையும், வேடிக்கை பார்க்கும் மனநிலையையும் எடுத்து காட்டுவதை போல உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications