"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்"- அட்டாரி எல்லையில் கதறலுடன் வெளியேறிய பாகிஸ்தானியர்கள்!
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி எல்லை பெரும் சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாக பெற்றோரை பிரிந்த பிள்ளைகள், பிள்ளைகளை தவிக்க விடும் பெற்றோர் என இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் சாரை சாரையாக உறவுகளை இந்திய மண்ணிலேயே விட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை (திருக்குறள் 555)
இந்த திருக்குறளுக்கு கருணாநிதி எழுதிய உரை விளக்கம்: கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தங்களது ஏவல் படையான பயங்கரவாத கும்பலை ஏவிவிட்டு இந்திய நிலத்தில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிர்களின் ரத்தம் குடிக்கச் செய்துள்ளனர். பாகிஸ்தான் கொடூர ஆட்சியாளர்களின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு விலையை கொடுத்துக் கொண்டிருப்பதும் பாகிஸ்தானிய மக்கள்தான்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் படுகொலையைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என்ற கெடு.
இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் என்பவர்கள், ஏதோ சுற்றுலாவுக்கு வந்தவர்கள் மட்டுமல்ல் அல்ல.. உற்றமும் சுற்றமுமாய் ரத்தமும் சதையுமாய் எல்லைகள் பிரித்தாலும் கூடி மகிழ்ந்த உறவுகளைப் பறிகொடுக்கும் பாகிஸ்தானியர்களும்தான் இதில் அடங்கும்.
பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி எல்லையில் கதறி அழும் உறவுகளின் காட்சிகளைப் பார்த்த பின்னராவது 'பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல்களின்' மனசாட்சி உலுக்கட்டும் என்பதாகவே இருக்கின்றன.
தந்தை பாகிஸ்தானி.. தாய் இந்தியர்.. மகன்/ மகளுக்கு வயது 14.. இந்திய அரசின் உத்தரவால் பெற்ற தாயை இந்திய நிலத்தில் விட்டுவிட்டு அப்பாவின் கை பிடித்து கதறியபடியே அட்டாரி எல்லையை கடக்கும் பிஞ்சுகள்..
எல்லை கடந்து வாழும் சொந்தங்களைப் பார்க்க 45 நாட்கள் விசாவில் வந்துவிட்டு பாதிப்பேரை கூட பார்க்காமல் பாகிஸ்தானுக்கே திரும்புகிறேனே.. வாழ்நாளில் இனி இவர்களை காண்போமா? என கதறி அழும் ரத்த உறவுகள்..
70 வயதில் ரத்த உறவுகளைத் தேடி இந்திய நிலத்துக்கு வந்து சிலரை மட்டும் பார்த்து பரவசப்பட்ட நிலையில் படுபாதக பயங்கரவாதிகளால் பாதியிலேயே விட்டுவிட்டு செல்லும் பெஷாவரின் முதியவர்..
எப்போதும் தாக்குதல்கள் நடக்கும் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இருந்து சொந்தங்களை தேடி வந்து வெறும் கையுடன் பாகிஸ்தான் திரும்பும் உறவுகள்..
இப்படி அட்டாரி எல்லையில் இருந்து விடைபெறுகிற ஒவ்வொரு கண்ணீரும் ஓராயிரம் கதைகளை சொல்கிறதே..நெஞ்சு கனக்க விம்மியபடியே இந்த காட்சிகளை எல்லாம் ஒரு கணம் அந்த பயங்கரவாத பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்த்திருந்தால், ஏவல் படையை ஏவிவிட்டிருக்க மாட்டார்கள்..
ஆம்
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்!
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications