Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவை ராஜினாமா செய்ய சொன்ன உ.பி. பெண் பேராசிரியர் மீது தேசதுரோக வழக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்ட லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர் மாத்ரி ககோட் என்ற டாக்டர் மெதுசா மீது உத்தரப்பிரதேச மாநில அரசு, தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 27 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யபட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இந்த கொடூரப் படுகொலை நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

UP

அதேநேரத்தில் 2,000-க்கும் அதிகமானோர் கூடும் சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் செய்யபடவில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றன. டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது உண்மை என மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார்.

இந்த நிலையில் பஹல்காம் படுகொலை சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்ததால் போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது உ.பி. அரசு வழக்கு பதிவு செய்தது. மத்திய அரசை விமர்சித்திருந்த நேஹா சிங் ரத்தோரின் சமூக வலைதளப் பதிவுகளை பாகிஸ்தானியர்கள் அதிக அளவு சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.

நேஹா சிங் ரத்தோரைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் லக்னோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மாத்ரி ககோட் என்ற டாக்டர் மெதுசா. சமூக வலைதளங்களில் அரசாங்கத்தை கடுமையாக சாடக் கூடியவர் பேராசிரியர் மாத்ரி ககோட். பஹல்காம் படுகொலை சம்பவம் தொடர்பாக டாக்டர் மெதுசா தமது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

டாக்டர் மெதுசா தமது வீடியோ பதிவில், ஒருவரது மதத்தைக் கேட்டு சுட்டுப் படுகொலை செய்வது பயங்கரவாதம்தான். அதேபோலவே, மதத்தின் பெயரால் மதத்தைக் கேட்டு கும்பல் படுகொலைகளை நிகழ்த்துவது, மதத்தின் பெயரால் வீடுகள் தர மறுப்பது, பணியிடங்களில் வேலைவாய்ப்புகளைப் பறிப்பது, வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிப்பதும் கூட பயங்கரவாதம்தான். இந்த பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பொறுப்பு; அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி, டாக்டர் மெதுசா மீது புகார் கொடுத்தது. ஏபிவியின் ஜதின் சுக்லா என்பவர் கொடுத்த புகாரி, டாக்டர் மெதுசா, தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறார்; நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார். டாக்டர் மெதுசா எப்போதும் காவி பயங்கரவாதம் குறித்து விமர்சிக்கிறார். டாக்டர் மெதுசாவின் எக்ஸ் பதிவு பாகிஸ்தானியர்களால் கொண்டாடப்படுகிறது என குற்றம்சாட்டி இருந்தார்.

இதனடிப்படையில் தற்போது டாக்டர் மெதுசா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் லக்னோ பல்கலைக் கழக நிர்வாகம், இந்த வழக்கு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+