வாகா எல்லை மூடல்- பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேர கெடு-மத்திய அரசு அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் படுகொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வாகா- அட்டாரி எல்லைகளை மூட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது; மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர அதிகாரிகள் நாட்டை விட்டு ஒரு வாரத்தில் வெளியேறவும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது; இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் நிறுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 27 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சவூதியில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதேபோல ஜம்மு காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை நடத்தினார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Modicabi

இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் தற்போது பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

இன்றைய ஆலோசனைக் கூட்டததில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்:

- பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும்.

- பாகிஸ்தானியர்களுக்கு இனி இந்திய விசா வழங்கப்படமாட்டாது.

- இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

- இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

- இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வாகா மற்றும் அட்டாரி எல்லைகள் இழுத்து மூடப்படுகின்றன.

- சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வரவும் அனுமதி கிடையாது.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து முப்படைகளின் ஆலோசகர்கள் உடனடியாக திரும்பப் பெறப்படுகின்றனர். பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைக்கப்படுகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+