பேல் பூரி சாப்பிட்டபோது, முஸ்லிமா என கேட்டு மனைவி கண் எதிரில் கணவனை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்! கதறல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெசரன் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் பல சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர், தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு டிஆர்எஃப் (TRF) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்டவர்கள் அந்த கோரமான காட்சிகளை விவரித்துள்ளனர்.

பேல் பூரி சாப்பிட்டபோது கணவர் சுடப்பட்டார்
தாக்குதலுக்குப் பிறகு பல வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அலறியடித்து ஓடுவதைக் காண முடிகிறது. அப்படி வெளியான ஒரு வீடியோவில், ஒரு பெண் பதற்றத்தோடு, தனது கணவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தார். அதற்கு முன்பு, பயங்கரவாதி அவரிடம் 'முஸ்லிமா?' என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்தப் பெண், தான் தனது கணவருடன் பேல் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு பயங்கரவாதி வந்து 'நீங்கள் முஸ்லிமா?' என்று கேட்டு தனது கணவரை சுட்டுவிட்டதாகக் கூறினார்.
பெண்ணின் உருக்கமான வேண்டுகோள்:
பஹல்காமில் இருந்து வெளியான சமீபத்திய வீடியோவில், ஒரு பெண் தனது கணவரைக் காப்பாற்றுமாறு உள்ளூர் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் காட்சி காணப்படுகிறது. இந்த உருக்கமான வேண்டுகோள் நாடு முழுவதும் அனுதாப அலையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகள் முதலில் அவர்களின் பெயர்களைக் கேட்டு பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
"போய் மோடியிடம் சொல்லுங்கள்..."
தனது கணவரைக் கொன்ற பிறகு பயங்கரவாதிகள் "போய் மோடியிடம் சொல்லுங்கள்..." என்று கூறியதாக தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது சோகமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். கண் முன்பே கணவரை கொன்றதாகவும், ஆனால் தன்னை கொல்லாமல், மோடியிடம் போய் சொல்லுங்கள் எனக் கூறியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
கைகொடுத்த உள்ளூர் மக்கள்
பஹல்காமிற்கு வந்திருந்த ஒரு சுற்றுலாப் பயணியிடம் ஆங்கில ஊடகம் ஒன்று பேசியது. பிரதீப் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த சுற்றுலாப் பயணி, பஞ்சாபில் இருந்து காஷ்மீருக்கு வந்ததாகத் தெரிவித்தார். இங்கு வந்த பின்னரே சிறிது நேரத்திற்கு முன்பு பயங்கரவாத தாக்குதல் நடந்ததாகவும், சில சுற்றுலாப் பயணிகள் சுடப்பட்டு இறந்ததாகவும் அவருக்குத் தெரிய வந்துள்ளது.
அந்த சுற்றுலாப் பயணி கூறுகையில், "சிறிது அச்சமான சூழல் நிலவுகிறது. வீட்டிலிருந்தும் திரும்பி வரச் சொல்லி அழைப்பு வந்தது. நாங்கள் திரும்பிச் செல்லவிருந்தபோது, எங்கள் காஷ்மீரி சகோதரர்கள் இங்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நீங்கள் இங்கேயே தங்குங்கள், பயப்பட வேண்டாம் என்று கூறினார்கள். இங்குள்ள எங்கள் உள்ளூர் மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள்," என்றார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி
மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி, பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சற்று நேரத்திற்கு முன்பு புறப்பட்டதாக ஏஎன்ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ஏஎன்ஏ-விடம் பேசிய அந்த சுற்றுலாப் பயணி, தாம் அந்த இடத்தை விட்டுச் சென்ற உடனேயே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சத்தம் கேட்டதாகக் கூறினார். அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றனர். நாங்களும் முடிந்தவரை விரைவாக அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டோம், அதனால் திரும்பிப் பார்க்கவில்லை என்றார்.
தாக்குதலுக்குப் பிந்தைய தற்போதைய நிலை
பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசி, தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அமித் ஷா அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பிற அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் டிஜிபி காணொளி மூலம் இந்தக் கூட்டத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இந்த தாக்குதலைக் கண்டித்து, விருந்தினர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அருவருப்பான செயல் என்று கூறினார். பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications