For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல் – 11 நாட்களுக்குப் பின் மீட்பு!

Google Oneindia Tamil News

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் கிட்டதட்ட 11 நாட்களாக சிக்கித் தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகராவில் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல் வீடு உள்ளது.

அவரது வீட்டுக்குள் 10 நாட்களுக்கு முன்னர் வெள்ள நீர் புகுந்தது. தகவல் தொடர்பு துண்டிப்பு காரணமாக உதவி எதுவும் கிடைக்காமல் அவர் அங்கு சிக்கியுள்ளார்.

தொலைத் தொடர்பு துண்டிப்பு:

தொலைத் தொடர்பு துண்டிப்பு:

இதுபற்றி மீட்கப்பட்ட ரசூல், " கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு துண்டிப்பு காராணமாக செல்போன்கள் இயங்கவில்லை. இன்டர்நெட் தொடர்பும் இல்லை.

உதவியற்ற நிலை:

உதவியற்ற நிலை:

இது எனக்கு மற்றும் எனது குடும்பத்திற்கு உதவியற்ற நிலையாகும். எங்கள் வீட்டின் கீழ்த்தளம் தண்ணீரில் மூழ்கியதால் நாங்கள் முதல் மாடிக்கு சென்று காத்திருந்தோம்.

பத்திரமாக மீட்பு:

பத்திரமாக மீட்பு:

மேலும், நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்று உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறுகையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் அணியின் கேப்டன்:

காஷ்மீர் அணியின் கேப்டன்:

பர்வேஸ் ரசூல், ஜம்மு காஷ்மீர் ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

2 கிலோ மீட்டரில் சிக்னல்:

2 கிலோ மீட்டரில் சிக்னல்:

"எனது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் எனது தொலைபேசிக்கு சிக்னல் கிடைத்தது. வெள்ளம் காரணமாக எங்களுடைய அடையாளம் எதுவும் காணப்படவில்லை வதந்திகள் பரவியது எனக்கு தெரிய வந்தது.

இயல்பான சூழ்நிலை:

இயல்பான சூழ்நிலை:

அது தவறானது. இந்த சூழ்நிலை மிகவும் கொடூரமானது. ஆனாலும், தற்போது அனந்த்நாக்கில் இயல்பான சூழ்நிலையே நிலவுகிறது. இரண்டு நாட்களுக்கு ஸ்ரீநகருக்கு வரத்திட்டமிட்டுள்ளேன்.

அணி வீரர்கள்

அணி வீரர்கள்

என்னால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஞ்சி கிரிக்கெட் அணியின் வீரர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை" என்று ரசூல் தெரிவித்துள்ளார்.

மீட்ட குழுவினர்:

மீட்ட குழுவினர்:

இப்படி 11 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூலை மீட்பு குழுவினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

English summary
When floodwaters entered cricketer Parveez Rasool's residence in Bijbehara in Kashmir's Anantnag district 10 days back, his first reaction was to drag his two cricket kit bags upstairs to the first floor. But little did Rasool know what would follow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X