லோக்சபா தேர்தலில் வாரணாசியில் தோற்றால்...மோடிக்கு கேஜ்ரிவால் சவால்!!
வாரணாசி: லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் தோற்றுவிட்டால் குஜராத்துக்கு 'திரும்பி செல்ல' தயாரா? என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசியில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட இருக்கிறார்.
இந்நிலையில் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேஜ்ரிவால் வாரணாசி சென்றுள்ளார். அவர் வாரணாசி செல்லும் வழியில் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்று நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் 'ஏதோ' செய்ய திட்டமிட்டிருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

அதாவது தமது பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்திருந்தார் கேஜ்ரிவால். அதன் பின்னர் வாரணாசி சென்றடைந்த கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நரேந்திர மோடி வாரணாசியில் தோற்று, குஜராத்தில் வெற்றி பெற்றால் அவர் சொந்த மாநிலத்துக்கே திரும்பிச் செல்ல தயாரா? என்று சவால் விட்டிருக்கிறார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் கேஜ்ரிவால் பின்னர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பனாரஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுடனும் கேஜ்ரிவால் கலந்துரையாட இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications