கட்டிட பணியின் போது விபத்து.. திருவனந்தபுரத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
திருவனந்தபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணியின் போது எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் பலியாகினர்.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கட்டுமானப்பணி நடைபெற்ற பகுதியில் மண்மேடு சரிந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பங்கன்பாராவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று குடியிருப்பின் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியை ஒட்டியுள்ள சுமார் 10 அடி உயரம் கொண்ட மண்மேடு திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்து. இதுகுறித்தி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 4 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பலியானவர்களில் 2 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் அடையாளம் காணப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications