கார் விபத்தில் சிக்கிய உம்மன்சாண்டி... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் - பாதுகாவலருக்கு காயம்!
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன்சாண்டி பயணம் செய்த கார், எதிர்பாராதவிதமாக டயர் பஞ்சராகி வாய்க்காலில் விழுந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உம்மன்சாண்டி காயம் ஏதுமின்றி உயிர்தப்பினார்.
கேரளா மாநிலம் கோழிக்கோடுவில் நேற்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துக் கொண்ட விழாவில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்றார் . பின்னர் இரவு தனது காரில் புதுப்பள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் கானாகாரி அருகே அவரது கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கார் டயர் பஞ்சரானது. இதனால், சாலையில் இருந்து வழுக்கிச் சென்ற கார், அருகில் இருந்த சிறிய வாய்க்காலில் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உம்மன்சாண்டி காயமின்றி உயிர்தப்பினார். ஆனால், உம்மன் சாண்டிக்கு பாதுகாப்பாக காரில் இருந்த பாதுகாப்பு வீரர் காயம் அடைந்தார். உடனடியாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் உம்மன்சாண்டி பேசுகையில், ‘சீட் பெல்ட் அணிந்திருந்ததால், இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பினேன்' எனத் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications