அடுத்த வாரம் திருமணம்.. கேரள வெள்ளத்தில் எல்லாம் மாயம்.. இந்த பாலக்காடு பெண்ணுக்கு உதவுங்கள்!

அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த பாலக்காட்டை சேர்ந்த சனுஜா என்ற பெண் கேரளாவில் வெள்ளத்தில் உடமைகளை இழந்துவிட்டு தவித்து வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளா வெள்ளம்..இந்த பாலக்காடு பெண்ணுக்கு உதவுங்கள்!- வீடியோ

    திருவனந்தபுரம்: அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த பாலக்காட்டை சேர்ந்த சனுஜா என்ற பெண் கேரளாவில் வெள்ளத்தில் உடமைகளை இழந்துவிட்டு தவித்து வருகிறார். நீங்கள் நினைத்தால் அவருக்கு உதவலாம்.

    கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    Kerala Floods: Help this Palakkad girl for her marriage

    1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.

    இந்த வெள்ளத்தினால், கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் திருமணம் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலக்காடு பகுதியை சேர்ந்த சனுஜா என்ற பெண், அடுத்த வாரம் நடக்க இருந்த திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பொருட்களில் பலவற்றை இழந்து உள்ளார்.

    Kerala Floods: Help this Palakkad girl for her marriage

    இந்த வெள்ளத்தில் அவரின் வீடு மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது. இதனால் அவர்கள் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த நிறைய பொருட்கள், பாதி அளவு தங்கம் தண்ணீரில் சென்றுள்ளது. அடுத்த வாரம் திருமணம் நடக்க இருப்பதால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டத்தில் உள்ளார்.

    Kerala Floods: Help this Palakkad girl for her marriage

    பொருளாதாரம் படித்துள்ள சனுஜாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. பெற்றோர்கள் இருவரும் தினக்கூலி வேலை செய்கிறார்கள். இந்த வெள்ளத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அவர்களுக்கு நாம் நினைத்தால் உதவி செய்ய முடியும்.

    கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வங்கி கணக்கில் அவருக்கு உதவி செய்ய விரும்பும் மக்கள் பணம் செலுத்தலாம். சனுஜாவின் தந்தை ஸ்ரீதரனின் வங்கி கணக்கு விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

    Kerala Floods: Help this Palakkad girl for her marriage

    வெள்ளத்த்தால் வீட்டை இழந்துவிட்டு தற்போது வாழ்க்கையை இழக்கும் நிலையில் உள்ள இந்த பட்டதாரி பெண்ணுக்கு உதவுங்கள்.

    ACCOUNT DETAILS :

    ACC NUMBER : 127201000014931

    NAME : MR. SREEDHARAN

    INDIAN OVEARSEAS BANK, PUTHUCODE BRANCH

    IFSC: IOBA0001272

    KERALA 678687

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+