கேரளா வெள்ளம்: கரம் கொடுக்கும் தமிழ்நாடு.. ரூ.5 கோடி நிதி உதவி அளிக்க முடிவு
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளுக்கு தமிழகம் சார்பாக ரூ. 5 கோடி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளுக்கு தமிழகம் சார்பாக ரூ .5 கோடி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக அங்கு பெரிய அளவில் மழை பெய்கிறது.

இதனால் மாநிலம் முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. கேரளாவிற்கு 5 கோடி மீட்பு நிதி அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் மீட்பு பணிகளில் உதவுவதாகவும் கூறியுள்ளது.
சென்னையில் வெள்ளம் வந்த போது, கேரள அரசு பெரிய அளவில் உதவியது குறிப்பிடத்தக்கது. இதற்காக கேரளாவில் இருந்து அப்போது ஆட்கள் அனுப்பப்பட்டு இருந்தனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications