கேரளா ஆளுநர் ஷீலா தீட்சித் திடீர் ராஜினாமா!
திருவனந்தபுரம்: கேரள மாநில ஆளுநர் ஷீலா தீட்சித் தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது முதல் ஆளுநர்கள் மாற்றம் என்ற விவகாரம் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்தது. மத்திய உள்துறை செயலரே தொலைபேசியில் சில ஆளுநர்களை அழைத்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர் இதுவரை உத்தரப்பிரதேசத்தின் பி.எல் ஜோஷி, சத்தீஸ்கரின் சேகர்தத், நாகாலாந்தின் அஸ்வினி குமார், மேற்கு வங்கத்தின் எம்.கே நாராயணன், கோவாவின் பிவி வான்சூ, மிசோரமின் வைக்கம் புருஷோத்தமன், மகாராஷ்டிராவின் சங்கரநாராயணன் ஆகியோர் ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
புதுவை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, மிசோராம் ஆளுநராக இருந்த கமலாபெனிவால் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் கேரளாவின் ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித் தமது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று கூறிவந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை ஷீலா தீட்சித் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அவர் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இதனிடையே இன்று திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஷீலா தீட்சித். அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications