கேரளாவில் அனைத்து பார்களும் மூடப்பட்டன.. இறுதி நேரத்தில் பரபரப்பான மது விற்பனை!
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று இரவு முதல் அனைத்து மதுபான பார்களும் மூடப்பட்டன. இதனால் நேற்று பகல் முழுவதும் சலுகை விலையில் இருக்கும் ஸ்டாக்குகளை விற்றுத் தீர்த்தனர் பார் உரிமையாளர்கள்.
கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 418 மதுபான பார்களை மூட உத்தரவிட்டார். அதன் பின்னர் 312 பார்கள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது இயங்கி வரும் 312 மதுபான பார்களையும் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு 10 மணி முதல் மூட முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, அனைத்து மதுபான பார்களும் மூடப்பட்டன. மேலும், ஓணம் பண்டிகை விரைவில் கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பார்களிலும் மதுபான வகைகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பார்களை மூட முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, தங்களிடம் உள்ள மதுவை விற்பனை செய்வதில் பார் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, கடைசி நாளன்று ஒரு பெக் மதுபானம் வாங்கினால், 3 பெக் இலவசம் எனவும், ஒரு பீர் வாங்கினால், இன்னொரு பீர் இலவசம் எனவும் அறிவித்திருந்தனர். இதனால் கேரளாவிலுள்ள 312 பார்களிலும் கூட்டம் அலைமோதியது.
வருகிற 1ஆம் தேதி முதல் கேரளாவில் உள்ள 30 அரசு மதுபானக் கடைகளையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, பார் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில், அரசின் திடீர் உத்தரவால் தங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பார்களை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications