For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது?- ஆப்ஷன் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கேரள ஹைகோர்ட் தேர்வு!

Google Oneindia Tamil News

கொச்சி: கேரள ஹைகோர்ட் உதவியாளர் பணிக்காக நடந்த எழுத்துத்தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று எழுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள், பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் ஹைகோர்ட் உதவியாளார் பணிக்காக நடைபெற்ற தேர்வு வினாத்தாளில் மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது என்ற சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

Kerala HC to probe question on PM's foreign visits in assistant exam

இதற்கு தேர்ந்தெடுக்க விடைகளாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் கொரியா ஆகிய 4 நாடுகள் தரப்பட்டுள்ளன. இதனையடுத்து பாஜகவினரிடையே இக்கேள்வித்தால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கேள்வியைப் பார்த்து தான் ஆச்சர்யமடைந்ததாகவும், பிரதமர் மோடியை சீண்டிப் பார்க்கும் நோக்கம் உள்ளவர்களே தேர்வில் இந்த கேள்வியை வைத்திருக்க வேண்டுமென்றும் இந்த தேர்வில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வினா குறித்த சர்ச்சையைப் பற்றிய விசாரணையை நடத்த கேரள நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

English summary
The Kerala high court had no knowledge about the question about Prime Minister Narendra Modi's foreign visits appearing in the question paper for high court assistant examination conducted on Sunday, officials said. However, the court has decided to enquire into the matter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X