For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிசார்ட் ஓனருடன் நெருக்கம்.. கணவரை கொன்று புதைத்த மனைவி.. லாட்ஜில் விஷம் அருந்திய நிலையில் மீட்பு

மும்பை லாட்ஜில் கள்ளகாதல்ஜோடி ஒன்று தற்கொலைக்கு முயன்றுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ரிசார்ட் ஓனருடன் நெருக்கம்.. கணவரை கொன்று புதைத்த மனைவி.. !

    இடுக்கி: கணவனின் கழுத்தை நெரித்து கொன்று, மூட்டை கட்டி குழிதோண்டி புதைத்த மனைவி, ரிசார்ட் ஓனருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். லாட்ஜில் விஷம் குடித்து உயிருக்கு போராடிய கள்ளக்காதல் ஜோடியை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கழுத்துக்குளமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ரிஜோஷ் - லிஜி. இவருக்கு வயது 29 ஆகிறது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

    அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் ரிஜோஷ் வேலை பார்த்து வந்தார். அதற்காக ரிசார்ட்டுக்கு பக்கத்திலேயே வீடு எடுத்து வசித்து வந்தனர். அந்த நேரத்தில்தான் ரிசார்ட் ஓனருக்கும், லிஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருக்கமானது. வாசிம் அப்துல் காதர் என்பதுதான் ரிசார்ட் ஓனர் பெயர். வயசு 27 ஆகிறது!

     ரிசார்ட் ஓனர்

    ரிசார்ட் ஓனர்

    இந்த நிலையில் போன 31-ம் தேதி முதல் ரிஜோஷை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் தொடர்ச்சியாக புகார் அளித்தனர். அதனால், போலீசார் லிஜியை விசாரிக்க வந்தபோதுதான், அவரையும் காணோம், ரிசார்ட் ஓனர் அப்துல் காதரையும் காணோம் என தெரியவந்தது. 2 வயது குழந்தையுடன் இவர்கள் இருவரும் மாயமாகவும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

     சாக்குமூட்டை

    சாக்குமூட்டை

    ரிசார்ட்டை சுற்றிலும் சோதனை நடத்த தொடங்கியபோது, ரிசார்ட் அருகில் மழை நீர் சேகரிப்பு தொட்டி இருந்தது. அதன்மேல் புதிதாக மண் போட்டு நிரப்பப்பட்டும் இருக்கவும் சந்தேகம் அடைந்து, அந்த தொட்டியை தோண்டினார்கள். அதற்குள் ஒரு சாக்குமூட்டை இருந்தது. மதுவில் விஷத்தை கலந்து, கழுத்தை நெரித்து கணவனை இந்த ஜோடி கொன்றது தெரியவந்தது.

     வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப்

    இதையடுத்து போலீசார், ரிசார்ட் ஓனர் அப்துல் காதரின் சகோதரர், நண்பர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது, சகோதரருக்கு அப்துல் காதர் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், "ரிஜோஷ் கொலை வழக்கில் எனது சகோதரர், நண்பர்களுக்கு தொடர்பில்லை" என தெரிவித்துள்ளார். இந்த வாட்ஸ்அப் வந்த இடத்தை ஆய்வு செய்ததில், குமுளியில் சிக்னல் காட்டியதால், தனிப்படையை அமைத்து இவர்களை தேடும் படலம் தீவிரமானது.

     லாட்ஜ் ஊழியர்கள்

    லாட்ஜ் ஊழியர்கள்

    இதனிடையே, வாசிம், லிஜி, அவரது 2 வயது குழந்தை ஆகியோர் மும்பை பனவேலியில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்துள்ளனர். ஆனால், நேற்று காலை முதல் அவர்கள் ரூம் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் சென்று பார்த்தபோது, 3 பேருமே மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். உடனே இதுகுறித்து மும்பை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

     தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    அப்போதுதான் குழந்தைக்கு விஷத்தை தந்து, இருவரும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் 2 வயது குழந்தை இறந்துவிட்டது. லிஜி, முகம்மது வாசிமுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. மும்பை போலீஸார் அளித்த தகவலின்பேரில், கேரள தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    kerala illegal love couple attempted suicide in mumbai lodge and 2 year old daughter died
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X