பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள மட்டுமே தகுதியானவர்கள்: கேரள முஸ்லிம் தலைவர் சர்ச்சை பேச்சு
திருவனந்தபுரம்: பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது இஸ்லாமுக்கு விரோதமானது, அவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள மட்டுமே தகுதியானவர்கள் என்று, கேரள மாநில சன்னி இஸ்லாமிய பிரிவு தலைவர் அபூபக்கர் முசல்யார் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆல் இந்திய சன்னி ஜாமியாத்துல் உலமா அமைப்பின் தலைவரான முசல்யார், கோழிக்கோட்டில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பு, கூட்டத்தில் பேசியதாவது: பாலின சமத்துவம் என்பது, நிஜத்தில் நடைபெறப்போவது கிடையாது. அப்படி நடக்க வைக்க முயலுவது இஸ்லாமுக்கு எதிரானது. மனிதத்துக்கும், அறிவுக்கும் எதிரானது.

பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு இணையாக முடியாது. பெண்கள், குழந்தைகளை பெற்றுக்கொள்ள மட்டுமே தகுதியானவர்கள்.
தாங்க முடியாது
நெருக்கடியான காலகட்டங்களை, பெண்களால் தாக்குப்பிடிக்க முடியாது. உதாரணத்துக்கு, ஆயிரக்கணக்கான, இதய நோய் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மத்தியில், ஒரு பெண் மருத்துவர் இருந்தால் ஆச்சரியமே. இது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது.
சேர்ந்து படிக்க கூடாது
கல்லூரிகளில், ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்த்து படிக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்பது இஸ்லாமையும், அதன் கலாச்சாரத்தையும் ஒடுக்கும் ஒரு முயற்சிதான். இவ்வாறு அவர் பேசினார்.
பாலியல் கொடுமை?
கேரள மதரசாக்களில், சிறுவர், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதாக, முஸ்லிம் பெண் பத்திரிகையாளர், தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்த கருத்தை, முசல்யார் மறுத்தார். ஆதாரம் இருந்தால் நிரூபிக்க வேண்டும் என்று முசல்யார் கூறினார்.
சர்ச்சை மன்னர்
சமீபத்தில், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு தருவது மிகவும் அதிகப்படியான நடவடிக்கை என்று கருத்து கூறி முசல்யார் சர்ச்சைக்குள்ளாகியிருந்தார். சர்ச்சை பெரிதானதால் தனது பேச்சை மாற்றிக்கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications