For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தின்கோயிசர்கள் கொண்டாடிய அட்சய ஜட்டி தினம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: அட்சய திருதியை தினத்தை அன்னதானம் செய்வது, நகை வாங்குவது என நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், 'அட்சய ஜட்டி' கொண்டாடியுள்ளனர் கேரளாவை சேர்ந்த தின்கோயிசர்கள் கொண்டாடியுள்ளனர்.

Kerala's Dinkoists take on Akshaya Jatteeya

தின்கோயிசம் என்பது பழமையான மதம் என்று கூறி கொள்ளும் தின்கோயிசர்கள் மதம் மற்றும் மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிரானவர்கள். அனைவரும் கொண்டாடும் சில பண்டிகைகளை நக்கலடித்து வேறுவிதமாக கொண்டாடி வருவதும் வழக்கம்.

இந்நிலையில், அட்சய திருதியை தினத்தை அட்சய ஜட்டி" தினம் என்று வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். ஆண்டுதோறும் மே மாதம் 8 மற்றும் 9 தேதிகளில் இந்த தினம் வரும். அன்றைய தினத்தில் உள்ளாடை வாங்கினால் அது பலனளிக்கும் என்று இந்த தினத்தை கொண்டாடியுள்ளனர்.

தங்கம் வாங்குவது கடினம், ஆனால் ஜட்டி வாங்குவது அப்படி அல்ல என்று கூறிய இவர்கள், இதற்காக ஜட்டியில் தின்கன் படத்தை அச்சிட்டு, அதனை விற்பனை செய்துள்ளனர். மேலும், ஆன்லைனில் "புக் யுவர் ஜட்டி" என்று ஆன்லைனில் ஜட்டியை புக் செய்யும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த ஜட்டி விற்பனை அம்மாநிலத்தின் கொச்சி, கோழிக்கோடு, பாலக்காடு, தலசேரி ஆகிய பகுதிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 300 ஜட்டிகளை இவர்கள் விற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The auspicious festival of Akshaya Jatteeya celebrates on May 8-9, 2016, which is the 77th day of the 44th month of Jatteeya according to the Jupiterian calendar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X