சபரிமலை: லட்சக்கணக்கில் பக்தர்கள்! திணறும் நிர்வாகம்- தரிசன நேரம் நீட்டிப்பு- விழிபிதுங்கும் கேரளா!
பம்பை: சபரிமலையில் வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து கேரளா உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலத்தில்தான் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவர். பம்பை நதிக்கரையில் இருந்தே பக்தர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு பின்னர் படிப்படியாக மலை ஏற அனுமதிப்பர். வழக்கமான கூட்டம் இருக்கும் காலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாது. அப்பச்சி மேடு, சரங்குத்தி தாண்டி சன்னிதானத்தை நெருங்கும் போது கியூவில் பக்தர்கள் நிறுத்தப்பட்டு பகுதி பகுதியாக தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் கேரளா உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களை தொடர்ந்து பிறப்பித்து வருகிறது. பக்தர்கள் சரங்குத்தி பகுதியிலேயே கியூவில் ஒழுங்குபடுத்தப்பட்டு தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சராசரியாக தரிசனத்துக்காக 14 மணிநேரம் முதல் 16 மணிநேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
சபரிமலையில் மலை ஏறும் போது நெரிசல், மூச்சு திணறலால் தமிழக சிறுமி பத்மா ஶ்ரீ நேற்று மரணம் அடைந்தது பெரும் துயரை ஏற்படுத்தியது. இதனால் முதியவர்கள், குழந்தைகளுக்கு தனி வரிசை உருவாக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் இந்த வரிசைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தேவசம் போர்டு நிர்வாகம் செய்வதறியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் பக்தர்களின் தரிசன நேரத்தையும் தற்போது நீட்டித்துள்ளனர். இரவு 11 மணி வரையில் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம். அதிகாலையில் 3 மணி முதலே பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இருமுடி கட்டிச் சென்ற பக்தர்கள் பாதிவழியிலேயே இதுவரை இல்லாத வகையில் திரும்புகிற நிலைமையும் உருவாகி இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். குழந்தைகள், முதியவர்களுடன் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் மிக மிக கவனமாக பயணம் மேற்கொள்ளவும் தரிசனத்தின் போது பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டும் வருகின்றனர். கேரளா மாநில உயர்நீதிமன்றமும் அடுத்தடுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் விவரங்களை தேவசம் போர்டு நிர்வாகத்திடம் கேட்டுப் பெற்று வழிகாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications