டாய்லெட்டில் நாப்கின்... பெண் ஊழியர்களின் ஆடைகளைக் களைந்து சோதனை.. கொச்சியில்!
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் டாய்லெட்டில் நாப்கினைப் போட்டது யார் என்பதைக் கண்டுபிடிக்க அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் கொண்டு போய் ஆடைகளைக் களைந்து நடத்தப்பட்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனையால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாநில மகளிர் ஆணையமும் இன்த சோதனை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த கொடுமையான சோதனையை அந்த நிறுவனத்தின் இரண்டு பெண் மேற்பார்வையாளர்கள் நடத்தியுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொச்சியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அஸ்மா ரப்பர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான பெண் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்த நிறுவனம் மீது அதில் பணியாற்றி வரும் ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், டிசம்பர் 10ம் தேதி எங்களது நிறுவனத்தின் டாய்லெட்டில் ஒரு பயன்படுத்தப்பட்ட நாப்கின் கிடந்துள்ளது. இதனால் கோபமடைந்த இரண்டு பெண் மேற்பார்வையாளர்கள் யார் இதைப் போட்டது என்று பெண் ஊழியர்களை அழைத்துச் சப்தம் போட்டனர்.
ஆனால் யார் போட்டது என்று தெரியவில்லை. இதையடுத்து 50 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களை, மொத்தம் 45 பேர், ஒரு தனியறைக்கு அவர்கள் வரவழைத்தனர். அந்த அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த அறையில் வைத்து அனைத்துப் பெண்களையும் ஆடைகளை கழற்றச் சொல்லி அந்த இரு பெண் மேற்பார்வையாளர்களும் சோதனையிட்டனர்.
இந்த சோதனை எங்களுக்கு பெரும் மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சோதனை நடத்திய அந்த இரு பெண் மேற்பார்வையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தப் புகார் கொடுக்கபப்ட்ட நான்கு நாட்கள் கழித்தே திரிகக்ககரா காவல் நிலையம் அதை பதிவு செய்துள்ளது. தற்போது அந்த இரண்டு பெண் சூப்பர்வைசர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் லிஸ்ஸி ஜோஸ் கூறியுள்ளார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications