'பாகிஸ்தான் வாழ்க கோஷம்'-கர்நாடகாவில் கேரளா இளைஞர் அடித்து கொலை- 20 பேர் கைது- சித்தராமையா வார்னிங்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் போது 'பாகிஸ்தான் வாழ்க' என கோஷம் எழுப்பியதால் கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர், கும்பல் ஒன்றால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போடுவது தேசத்துரோக செயல்- கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவின் மங்களூரை அடுத்த குடுப்பு என்ற கிராமத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளின் போது, திடீரென பாகிஸ்தானுக்கு ஆதரவாக இளைஞர் ஒருவர் கோஷம் போட்டதால் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளைஞரை சூழ்ந்து கொண்ட 20-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் நிலை குலைந்த இளைஞர் உயிரிழந்தார். இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர், கேரளா மாநிலம் வயநாடு- சுல்தான்பத்தேரியைச் சேர்ந்த அஷ்ரப் என விசாரணையில் தெரியவந்தது. மங்களூரில் தங்கி கூலி வேலை செய்து வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதாக கூறி அடித்தே கொலை செய்யப்பட்டார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக மங்களூர் போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தற்போது இந்த 20 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சித்தராமையா எச்சரிக்கை
இதனிடையே, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவது என்பது தேசத்துரோக செயல் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், மங்களூர் கும்பல் படுகொலை சம்பவத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தப்படும். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிடுவது தேசத் துரோக செயல்தான். இதை ஏற்க முடியாது என்றார் சித்தராமையா. இந்த கும்பல் படுகொலைச் சம்பவம் கர்நாடகா மற்றும் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications