பின்னால் வந்து விழுந்த பட்டம்.. செங்கோட்டையில் மோடி உரையின்போது பரபரப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றிய போது பட்டம் ஒன்று இறங்கி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்தினார். அவர் உரையை நிறைவு செய்யும் தருவாயில், வானில் பறக்கவிடப்பட்ட கருப்பு பட்டம் ஒன்று, அவர் உரையாற்றிய போடியத்தின் பின்பக்கமாக வந்து இறங்கியது.

நல்ல வேளையாக பிரதமர் மீது அது படவில்லை. வேறு யாருக்கும் அந்த பட்டத்தால் இடையூறு ஏற்படவில்லை. இதனால் பிரதமர் தனது உரையை தொடர்ந்தார். சுதந்திர தினம் மற்றும் ஜென்மாஷ்டமி தினங்களை முன்னிட்டு, டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9100 டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செங்கோட்டை மற்றும் நகரம் முழுக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications