Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நுரையீரலில் வீக்கம்.. பெண்ணுறுப்பில் காயம்... "மம்தா மேல நம்பிக்கையே இல்லை: கொல்கத்தா டாக்டர் அப்பா

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில், அரசியல் கடந்தும் நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. அத்துடன், அவசர அவசரமாக என்னுடைய மகளின் உடல் எரிக்கப்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்று உயிரிழந்த பெண்ணின் அப்பா எழுப்பியிருக்கும் கேள்விகள், மேற்கு வங்கத்தை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது.
பெண் டாக்டரை, மருத்துவமனையில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக அடுத்த 6 மணி நேரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டநிலையில், பொதுமக்களின் கொதிப்பு அடங்கவில்லை.. குறிப்பாக பெண் டாக்டரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்தான், தேசத்தையே அதிர்ச்சியில் விக்கித்து போக செய்துவிட்டது.

உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த சுபர்னா கோஸ்வாமி, "பெண்ணின் பிறப்புறுப்பில் 150 மி.லி அளவுக்கு விந்து இருக்கிறது... ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தால் இந்த அளவுக்கு விந்து இருப்பதற்கு சாத்தியமில்லை. நிச்சயம் இது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி அதிர்ச்சியை கூட்டினார்.

Kolkata woman Doctor mamata banerjee

டாக்டர்கள்: இந்த சம்பவத்தினால், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன... அனைத்து மாநிலங்களிலுமே டாக்டர்கள், புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.

மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.. நீதி கேட்டு 9வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள்: இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என பாஜகவினரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினரும் பதிலுக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு நடுவில், டாக்டர்கள் நடத்திய போராட்டத்தில், மம்தாவே நேரடியாகவே கலந்து கொண்டது, தேசத்தின் பார்வையை திரிணாமுல் பக்கம் திருப்பிவிட்டது.

தங்கள் மகள் கொல்லப்பட்டதில், மருத்துவமனையின் இதர டாக்டர்களுக்கும், உடன் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர்களை விசாரிக்கவேண்டும் என்று பெண்ணின் பெற்றோர்கள் விடுத்துள்ள கோரிக்கைதான், இந்த வழக்கின் போக்கில், கூடுதல் பரபரப்பை தந்துள்ளது.. மற்ற மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், விசாரணையும் துரிதமாகியிருக்கிறது.

குற்றவாளி: இதற்கு நடுவில், குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் மேற்கு வங்க முதல்வர் மவுத்தா பானர்ஜியும் தெரிவித்திருந்தார்.. குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றும் மம்தா கொந்தளித்தார்.. குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தினர் இறுதிக்கெடு விதித்து, கண்டன பேரணி நடத்தியிருந்த நிலையில், இதிலும் மம்தா முன்னணி நபராக பங்கேற்றிருந்தார்.

ஆனாலும், முதல்வர் மம்தா பானர்ஜி மீதான நம்பிக்கையே போய் விட்டதாக, உயிரிழந்த பெண் டாக்டரின் அப்பா, NDTV ஊடகத்துக்கு பேட்டி தந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சந்தேகம்: பேட்டியில் அவர் சொல்லும்போது, "இந்த சம்பவத்தில் நீதி வேண்டும் என்று சொன்ன மம்தா பானர்ஜி, இப்போது நீதி கேட்டுப் போராடும் சாதாரண மக்களை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்... ஒரே ஒரு நபர் மட்டும் இந்த கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்... ஆனால், மருத்துவமனையின் இருதய சிகிச்சை பிரிவை சேர்ந்த நபர்கள் மீதும் உறுதியான சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.

தன்னுடைய பெர்சனலான விஷயங்களை, என் மகள் டைரியில் தான் எழுதி வைப்பார்.. அந்த டைரியின் கிழிந்த ஒரு பக்கம் என்னிடம் இருக்கிறது.. ஆனால், சிபிஐ இது குறித்து வெளியே சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறது.

போராட்டம்: என் மகளின் நிலைமை வேற யாருக்குமே வரக்கூடாது.. என் மகள் மக்களுக்கு சேவை செய்தவள்.. ஆனால், அவள் வேலை செய்த இடமே, அவளை பாதுகாக்கவில்லை.. நடந்து வரும் போராட்டத்தை முதல்வர் நிறுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. அதனாலேயே 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களும் போராட்டம் நடத்த முடியாது

நடக்கும் விசாரணையில் எந்த முடிவும் வரவில்லை. நம்புகிறோம்... துறை அல்லது கல்லூரியில் இருந்து யாரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. ஒட்டுமொத்த துறையும் இதில் ஈடுபட்டுள்ளது. சுடுகாட்டில் மூன்று உடல்கள் இருந்தன, ஆனால் முதலில் எங்கள் மகளின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

உடல் தகனம்: உடல்கள் தகனம் செய்யப்படும் இடத்தில் பல்வேறு உடல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய மகளின் உடலை மட்டும் முதலில் எரித்துவிட்டார்கள்.. அவசர அவசரமாக என்னுடைய மகளின் உடல் எரிக்கப்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? முதல்வர் மீது எங்களுக்கு திருப்தி இல்லை. இழப்பீடு எதுவும் வாங்க மறுத்துவிட்டோம்" என்று ஆதங்கத்துடன் கூறுகிறார் பெண் மருத்துவரின் தந்தை.

முன்னதாக, ANI-க்கு பெண்ணின் தாய் அளித்த பேட்டியில், "என் மகள் கடந்த 8 ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஆனால் மறுநாள் இரவு 10.53 மணிக்கு தான் எங்களுக்கு போன் வந்தது. நாங்கள் மருத்துவமனைக்கு சென்றபோது, மகளை பார்க்க விடவில்லை.. அதிகாலை 3 மணிக்கு தான் அனுமதித்தார்கள்.

ஒரே ஒரு துணி: என் மகளின் பேண்ட் திறந்து இருந்தது... உடலில் ஒரே ஒரு துணி மட்டுமே இருந்தது. அவளது கை உடைந்திருந்தது.. கண்கள், வாயிலிருந்து ரத்தம் வந்திருந்தது. அவளை பார்த்தபோது யாரோ கொலை செய்ததை உணர்ந்தேன். குற்றவாளியை விரைவில் பிடிப்பதாக மம்தா பானர்ஜி சொல்லியிருந்தார்.. ஆனால் இப்போது வரை எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்தில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளது.. என் மகள் சாவுக்கு அனைத்து துறைகளுமே பொறுப்பு" என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் உடம்பில் மொத்தம் 14 இடங்களில் கொடூரமான காயங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கழுத்து, தலை, முகம், கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் காயங்கள் இருந்ததாம்.. மூக்கு, வலது தாடை, இடது கை, தோள்பட்டை பகுதிகளிலும் சொல்ல முடியாத அளவுக்கு காயங்கள் இருக்கிறதாம். நுரையீரலில் ரத்தமே உறைந்து கிடக்கிறதாம்.

கொடூர மரணம்: கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்வதற்கு முன்பு, பயங்கரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டே அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.. ஏற்கனவே கொந்தளித்து போயிருக்கும் மேற்கு மாநிலம், சமீபத்தில் வெளியாகியிருக்கும் இந்த தகவலால் மேலும் ஆவேசம் அடைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+