கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜினாமா கோரி ஜூனியர் மருத்துவர்கள் விடிய விடிய போராட்டம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா கேஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் (போலீஸ் கமிஷனர்) வினீத் கோயல் ராஜினாமா செய்ய கோரி ஜூனியர் மருத்துவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் லால்பஜார் பகுதியில் நடுவீதியில் அமர்ந்து நள்ளிரவிலும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தினர்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

ஆனாலும் பயிற்சி மருத்துவர் படுகொலையை மேற்கு வங்க மாநில அரசு, ஆர்ஜி கர் மருத்துவமனை நிர்வாகம் கையாண்ட முறை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மருத்துவ மாணவர்களின் இடைவிடாத உக்கிரமான போராட்டத்தால் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. பயிற்சி மருத்துவர் படுகொலையின் போது மருத்துவகல்லூரி முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்; கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வினீத் கோயல் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆர்ஜி கர் மருத்துவமனை சம்பவம் நடைபெற்ற முதல் நாளில் இருந்தே கொல்கத்தா போலீசார் அணுகுமுறை மோசமானது; ஆகையால் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி ஜூனியர் மருத்துவர்கள் நேற்று பிற்பகலில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் லால் பஜார் பகுதியில் இந்த பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்ற வேண்டும் என ஜூனியர் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதனை போலீசார் ஏற்க மறுத்ததால் நடு சாலையில் அப்படியே அமர்ந்து போராட்டம் நடத்தினர் ஜூனியர் மருத்துவர்கள். அவர்களுடன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேரணியாக வந்து மருத்துவ மாணவர்கள் இணைந்து கொண்டனர். இந்தப் போராட்டம் நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய இந்தப் போராட்டம் தொடர்ந்ததால் கொல்கத்தா நகரில் பதற்றம் நிலவுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications