மேற்கு வங்கம்: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி 7 நாட்களுக்கு போலீஸ் தடை உத்தரவு அமல்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி இன்று முதல் 7 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனை ஏற்கனவே சூறையாடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவத்தை விசாரித்த மாநில காவல்துறை சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் மற்றும் படுகொலை சம்பவத்தை மேற்கு வங்க மாநில காவல்துறை மூடி மறைக்க பார்த்தது, இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, பயிற்சி மருத்துவர்களுக்கு அதிக நெருக்கடிகள் கொடுப்பது உள்ளிட்டவைகளை முன்வைத்து பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. இதனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இதனையடுத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் இந்த கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிய பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு அம்மாநில போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications