மன உறுதியாலேயே ஹனுமந்தப்பா பனியிலும் 6 நாட்கள் உயிரை கையில் பிடித்து வைத்துள்ளார்: குடும்பத்தார்
டெல்லி: மனவுறுதியும், மீண்டு வந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்ற விருப்பமும் தான் வீரர் ஹனுமந்தப்பா 25 அடி ஆழ பனியில் உயிருடன் இருக்க உதவியுள்ளது என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு 25 அடி ஆழ பனியில் இருந்து மீட்கப்பட்டுள்ள ராணுவ வீரர் ஹனுமந்தப்பா டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமாவில் இருக்கும் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
சியாச்சின் போர் முனையில் பணிபுரிவது லேசானது அல்ல. கடந்த 30 ஆண்டுகளில் சியாச்சினில் 846 வீரர்கள் பலியாகியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 50 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

வீரர்கள்
சியாச்சினில் பணிபுரியும் வீரர்கள் முதலில் கடும் குளிரை எதிர்த்து போராட வேண்டும். கடும் குளிரால் உடலில் காயம் ஏற்படும். மேலும் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் வீரர்கள் மயங்கக்கூடும். வீரர்கள் கேன்களில் தங்களுக்கு அளிக்கப்படும் உணவை தான் சாப்பிடுகிறார்கள்.

ஹனுமந்தப்பா
கடுங்குளிர் நிலவும் சியாச்சினில் 25 அடி ஆழ பனியில் 6 நாட்களாக ஹனுமந்தப்பா உயிருடன் இருந்தது நிஜமாகவே அதிசயம் தான். மனவுறுதி, நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது தான் அவர் 6 நாட்களாக உயிருடன் இருந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பனிப்புயல்
சியாச்சினில் பணியாற்றும் வீரர்கள் பெரும்பாலும் குளிருடன் தான் போராட வேண்டும். அங்கு பனிப்புயல் வீசினால் தொடந்து 3 வாரங்களுக்கு வீசும். குளிருடன் படுவேகத்தில் காற்றும் வீசும். அங்கு பணிபுரியும் வீரர்களுக்கு தலைவலி, பேச்சு குளறல், தூக்கப் பிரச்சனை, பசியின்மை ஆகிய பிரச்சனைகள் வேறு ஏற்படும்.

வீரர்
சியாச்சினில் தன்னை பணியமர்த்தியதை அறிந்து ஹனுமந்தப்பா மிகவும் சந்தோஷப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அவரது மன உறுதியால் தான் அவர் உயிர் பிழைத்துள்ளார் என்கின்றனர் அவரது குடும்பத்தார்.












Click it and Unblock the Notifications