ஏ.கே.கங்குலிக்கு எதிராக சட்டப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி
கொல்கத்தா: பாலியல் புகாருக்கு ஆளான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி, மேற்கு வங்க தேசிய சட்ட அறிவியல் பல்கலைக்கழகத்தில் விகித்து வரும் கௌரவப் பேராசிரியர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை கங்குலி ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தப் புதிய கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி கங்குலி, "இது குறித்து எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நானும் எந்தவித முடிவும் எடுக்கவில்லை' என்றார்.
இந்நிலையில், நீதிபதி கங்குலிக்கு ஆதரவாக மேற்கு வங்க லோக் ஆயுக்த தலைவர் சமரேஷ் பந்தோபாத்யாய கருத்து தெரிவித்துள்ளார்.
"குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட காரணத்துக்காக மேற்கு வங்க மாநிலத்தின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை, நீதிபதி பதவி வகித்த ஒருவர் ராஜிநாமா செய்யக் கோருவது தவறானது. அவர் தரப்பு வாதத்தை எடுத்துக் கூற வாய்ப்பளிக்க வேண்டும்.
கங்குலியை ராஜிநாமா செய்யக் கோரும் அரசியல்வாதிகள், தங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்த உடன் பதவி விலகுவார்களா?' என்றும் சமரேஷ் பந்தோபாத்யாய கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications