"அந்த பக்கமே போகக் கூடாது.." வக்கீல் அசோஷியேஷன் ஸ்ட்ரிக்ட்! குஜராத் குளறுபடி நிறுவனத்திற்கு செக்
காந்திநகர்: குஜராத் மோர்பி பால விபத்தில் 130 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், அங்குள்ள பொதுமக்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த வாரம் மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டது. நதியின் குறுக்கே கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலம் திடீரெ இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது.
பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட போது அதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. நாட்டில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

மோர்பி பாலம்
பிரிட்டிஷ் காலத்தில் 1879இல் இந்த பாலம் கட்டப்பட்ட நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் பாலம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டன. அந்த பாலம் திட்டமிட்ட காலத்தை விட முன்கூட்டியே திறக்கப்பட்டது. அந்த பாலம் 120 பேரின் எடையை மட்டுமே தாங்கும் என்ற நிலையில், 400க்கும் மேற்பட்டோரைப் பாலத்தில் அனுமதித்ததும் விபத்து ஏற்பட முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

கைது
இது தொடர்பாக 9 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை வேகமாக நடந்து வருகிறது. டிக்கெட் விநியோகித்தவர்கள், பாலம் பழுதுபார்த்த ஒப்பந்ததாரர்கள், 3 பாதுகாவலர்கள், பாலத்தை காண்டிராக்ட் எடுத்த ஓரேவா குழுமத்தின் மேலாளர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 4 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர்.

என்ன காரணம்
இந்த வழக்கு விசாரணையில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது புனரமைப்பு பணிகளின் போது, அவர்கள் பாலத்தின் தளத்தை மாற்றி உள்ளன. இருந்த போதிலும், அவர்கள் பாலத்தின் கேபிளை மாற்றவில்லை. புதிய தளத்தின் எடையைப் பழைய கேபிள்களால் தாங்க முடியவில்லை. இத்துடன் அதிகப்படியானோரை அனுமதித்ததும் விபத்து ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்ற நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

நீதிமன்றம்
இது குறித்த தடய ஆய்வகத்தின் அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மேலும், பழுதுபார்க்கும் ஒப்பந்ததாரர்கள் இருவரும் அத்தகைய பணியை மேற்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுபோன்ற சிக்கலான பழுது பார்க்கும் வேலையை மேற்கொண்டது இல்லை என்ற போதிலும் அவர்களுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தீர்மானம்
இந்தச் சூழலில், 130 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த இந்த மோர்பி பால விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டாம் என்று குஜராத்தில் உள்ள இரண்டு உள்ளூர் வழக்கறிஞர் சங்கங்கள் ஒருமனதாகத் தீர்மானங்களை நிறைவேற்றின. மோர்பி மற்றும் ராஜ்கோட் பார் அசோசியேஷன்கள் தங்கள் உறுப்பினர்கள் ஓரேவா குழுமத்தின் ஆதரவாக ஆஜராகக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

குஜராத் அரசு
இந்த பால விபத்துக்குக் குஜராத் அரசு முற்றிலுமாக பொறுப்பேற்று உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும் காயமடைந்தோருக்கும் நிவாரணத்தை அறிவித்து உள்ளது. இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications