ரஜினியின் சாதனைகளுக்கு ஒரு பெரிய சல்யூட்!- லியாண்டர் பயஸ்
இந்த பூமியில் எனக்கு மிகப் பிடித்த மனிதர் ரஜினிகாந்த். அவரது சாதனைகளுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவிக்கிறேன், என்று பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய டென்னிஸில் பல்வேறு சாதனைகள் படைத்து வருபவர் லியாண்டர் பயஸ்.

தற்போது நடந்து வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வரும் லியாண்டர் பயஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவில் மூன்று டென்னிஸ் லீக் போட்டிகள் நடப்பது ஆரோக்கியமான விஷயம். உலகின் முக்கிய வீரர்களுடன் இளம் வீரர்கள் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சினிமாவில் நடிக்க நான் ஆர்வமாகத்தான் உள்ளேன். நல்ல கதை, சரியான தயாரிப்பாளர், சரியான சூழல் அமைய வேண்டும். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். இங்கு ஐந்தாண்டுகள் இருந்திருக்கிறேன்.
இந்த பூமியிலேயே நான் மிகவும் மதிக்கும் சாதனையாளர் ரஜினி சார். சினிமாவில் அவரது சாதனைகள், இந்தியாவுக்கு அவர் தந்த பங்களிப்பு, அவரது மனிதாபிமானம் போன்றவை மிகுந்த மரியாதைக்குரியவை.
தான் யார், எங்கிருந்து வந்தோம், இப்போது உள்ள இடம் என்ன என்பதை உணர்ந்து மாமனிதரான அவருக்கு எனது வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்," என்றார்.












Click it and Unblock the Notifications