செத்து போன நாயின் இறைச்சியை.. பிய்த்து எடுத்து சாப்பிட்ட தொழிலாளர்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ.. ஷாக்
இறந்த நாய் இறைச்சியை சாப்பிட்ட நபரின் வீடியோ வைரலாகிறது
ஜெய்ப்பூர்: ரோட்டில் செத்து கிடந்த ஒரு நாயின் இறைச்சியை ஒருவர் பிய்த்து எடுத்து சாப்பிடுகிறார்.. காதடைக்கும் பசியால், செத்து போன நாயை சாப்பிடும் அந்த நபரின் இந்த வீடியோ நெஞ்சை உலுக்கி எடுக்கிறது.
Recommended Video
நாடு முழுவதும் லாக்டவுன் உள்ளது.. நிறைய பேருக்கு வேலை இல்லை.. கையில் காசு இல்லை.. ஏராளமான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
அதில் பலர் மயங்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள்.. சிலர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.. தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கியபடி தளர்ந்து செல்கிறார்கள்.

அதிர்ச்சி
பிஞ்சுகள் காலில் செருப்பு கூட இல்லாமல் வெயிலில் நடந்து போகின்றன.. இந்த காட்சிகள் எல்லாம் தினந்தோறும் வீடியோக்களாக வெளிவந்து மனசை பிசைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்னொரு வீடியோ வெளியாகி எல்லோரையும் நிலைகுலைய வைத்தள்ளது.. ராஜஸ்தான் ரோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பிரதுமான் சிங் நருகா என்ற இளைஞர் காரில் சென்று கொண்டிருந்து இருக்கிறார்.. அப்போதுதான் அந்த கோர காட்சியை கண்டார்.

செத்த நாய்
பார்த்ததும் நடுங்கி போய்விட்டார்.. நருகாவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டிவிட்டது.. உடனே செல்போனிலும் அதை வீடியோவாக எடுத்தார்... அதில், மிக கொடூரமான பசிக்கு ஒரு நபர் ஆளாகி உள்ளார்.. ரோடு ஓரத்தில் ஒரு நாய் செத்து கிடக்கிறது.. அது ஹைவேஸ் என்பதால் விபத்தில் சிக்கி அந்த நாய் இறந்திருக்கிறது.. அந்த செத்து போன நாய் பக்கத்தில் அந்த நபர் சென்று உட்கார்ந்து, அதன் இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எடுத்து தின்று கொண்டிருக்கிறார்.. இதுதான் அந்த வீடியோ!!!

செத்து போயிடுவியே!
இதில் கொடுமை என்னவென்றால், அந்த வீடியோவில் ஏராளமான வாகனங்கள் இதை பார்த்து கொண்டுதான் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.. இந்த வீடியோ எடுத்த நருகா உடனே, அந்த இளைஞன் அருகில் சென்று, "ஏன் சாப்பிட எதுவும் இல்லையா, இதை சாப்பிட்டால் செத்து போய்டுவியே" என்று சொல்கிறார்.. அதற்கு அந்த இளைஞர் எதுவுமே பதில் சொல்லவில்லை.

தண்ணீர்
தொடர்ந்து நருகா, "என்கூட வா" என்று கூறி தன்னுடன் சாலையோரம் அழைத்து வருகிறார்.. கொஞ்சம் சாப்பாடும், குடிக்க தண்ணீரும் தருகிறார்.. அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அந்த நபர் உடனே அதை வாங்கி சாப்பிடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்ட நருகா, "யாராவது இதுபோன்ற நபர்களை பார்த்தால், தயவு செய்து உதவுங்கள்" என்று வீடியோவுடன் சேர்த்து இந்த பதிவையும் போட்டார்.
|
அதிர்ச்சி
இந்த வீடியோவை பார்த்த அனைவருமே அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.. ஏராளமானோர் ஷேர் செய்து வருகிறார்கள்.. மக்கள் கண்ணீர் பதிவுகளை தெரிவித்து வருகிறார்கள்.... செத்த நாயை சாப்பிட்ட அந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை, மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் தோன்றுகிறது. பசி கொடுமையால் எதை சாப்பிடுவது, எங்கு போய் கேட்பது என்றுகூட தெரியாமல் இருந்திருக்கிறார்.. வந்தாரை வாழ வைக்கும் விவசாய நாட்டிலா என்ற கேள்வி அனைவரையும் துளைத்துகொண்டே இருக்கிறது.. நல்லா ஒளிருது டிஜிட்டல் இந்தியா !
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications