பெண்களா இவர்கள்.. சிறுநீரை குடிக்க கட்டாயப்படுத்தி அராஜகம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட இளைஞர்!
சிறுநீரை குடிக்க பெண்கள் வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
போபால்: இவர்கள் எல்லாம் பெண்களா என்று கேட்க அதிர்ச்சியுடன் கேட்க தோன்றுகிறது.. குழாயில் தண்ணீர் பிடிக்க போன இளைஞரை, அங்கிருந்த பெண்கள் 3 பேரும் சேர்ந்து, இளைஞரை சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தி உள்ளனர... இதனால் அந்த இளைஞர் மனம் உடைந்து, அவமானத்தில் தற்கொலையே செய்து கொண்டார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மபி மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சஜோர் என்ற கிராமம் உள்ளது.. போபாலில் இருந்து 300கிமீ தொலைவில் உள்ளது இந்த கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் விகாஸ் ஷர்மா.. 19 வயது இளைஞர் இவர்.

கோயிலுக்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக தெருவில் உள்ள கைப்பம்பு இருக்கும் இடத்திற்கு இவர், சென்றிருக்கிறார்.. கையில் கொண்டு போன குடத்தை பம்ப் அடியில் வைத்துவிட்டு, குழாயில் தண்ணீர் அடித்து கொண்டிருந்தார்.
அந்த சமயம், மனோஜ் கோலி என்பவர் தனது சகோதரிகள் தரவாதி கோலி, பிரியங்கா கோலியுடன் அங்கு தண்ணீர் பிடிக்க நின்று கொண்டிருந்தார்.. அப்போது மனோஜ் கோலியின் குடத்தில் தண்ணீர் பட்டுவிட்டதாக தெரிகிறது... இதனால் மனோஜ் கோலி தனது சகோதரிகளுடன் சேர்ந்து விகாஸின் தலைமுடியை தரதரவென இழுத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விகாஸ் ஷர்மா வைத்திருந்த குடத்தில் மனோஜ் கோலி சிறுநீர் கழித்திருக்கிறார்.. அதை சகோதரிகள் 3 பேரும் சேர்ந்து குடிக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த விகாஸ் ஷர்மா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு இந்த சம்பவம் குறித்து விலாவரியாக கண்ணீர் சிந்தி ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார்.
மேலும் செல்போனிலும் தன் இறப்பு குறித்து ரிக்கார்ட் செய்து ஒரு வீடியோவை வைத்திருந்தார்.. இந்த வீடியோ, கடிதத்தின் அடிப்படையில் போலீசார் அந்த 3 பேரின் மீதும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல், தற்கொலைக்கு உடந்தை ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications