சத்தீஸ்கரில் ஷாக்: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை கூண்டோடு ஆட்டைய போட்ட பாஜக!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில ஆம் ஆத்மி கட்சி ஒட்டுமொத்தமாக பாஜகவுடன் இணைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு 90 இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 53 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 0.93% வாக்குகள்தான் கிடைத்தன. நோட்டாவுக்கு கூட சத்தீஸ்கரில் 1.26% வாக்குகள் பெற்றிருந்தன. இதேபோல மத்திய பிரதேசம், ராஜஸ்தானிலும் ஆம் ஆத்மி கட்சி பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸிடம் இருது ஆட்சியை பாஜக கைப்பற்றியது.
இந்த நிலையில் சத்தீஸ்கரில் இனி கட்சி தேறாது என்ற முடிவெடுத்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக மாநில அமைப்பை அப்படியே பாஜகவில் இணைத்துவிட்டனர். சத்தீஸ்கர் மாநில ஆம் ஆத்மி தலைவ கோமல் ஹுபேந்தி, துணைத் தலைவர் மிரி, மாநில செயலாளர் விஷால் கேல்கர் உள்ளிட்ட அத்தனை தலைவர்களும் கூண்டோடு பாஜகவில் இணைந்துவிட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜோகி) கட்சியும் பாஜகவுடன் இணைய தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஜனதா காங்கிரஸ் தலைவர் அமித் ஜோகி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜாபகவுடன் ஜனதா காங்கிரஸை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் கட்சி இது.
ஆனால் ஜனதா காங்கிரஸுக்கு முன்னதாகவே ஆம் ஆத்மி மாநில நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாகவே பாஜகவுக்கு தாவிவிட்டனர். இது கெஜ்ரிவால் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications