தேர்தலே வேண்டாம்..ம.பி. இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவுக்கு ஓடிப் போனதுக்கு இதுதான் காரணமாம்!
போபால்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பம் திடீரென வேட்பு மனு வாபஸ் பெற்றதுடன் பாஜகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். காங்கிரஸை விட்டு அக்சய் காந்தி பம் திடீரென பாஜகவுக்கு ஓடியதற்கான பின்னணி குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26-ல் 2 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்தன. மே 7 முதல் ஜூன் 1-ந் தேதி வரை மொத்தம் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் குஜராத்தின் சூரத் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு திடீரென தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் அங்கு போட்டியிட்ட சுயேட்சைகளும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வென்றார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் இந்தூர் லோக்சபா தொகுதியிலும் இதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. காங்கிரஸின் அக்சய் காந்தி பம் என்ற வேட்பாளர் கடைசி நேரத்தில் தமது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதுடன் பாஜகவுக்கு ஓடிப் போய்விட இதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்சய் காந்தி பம், பாஜகவுக்கு ஓடிப் போனது ஏன் என்பது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்னர் அக்சய் காந்தி பம் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று போடப்பட்டது. இந்த கொலை முயற்சி வழக்கை தமது வேட்பு மனுவில் அக்சய் காந்தி பம் தெரிவிக்கவில்லை. இதனை பாஜக ஒரு பிரச்சனையாக்கிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம், கொலை முயற்சி வழக்கில் மே 10-ந் தேதி அக்சய் காந்தி பம் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதாவது இந்தூர் தொகுதி வாக்குப் பதிவு மே 13-ந் தேதி நடக்கிறது. அதற்கு முன்னதாக கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் அக்சய் காந்தி பம் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில்தான் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே காங்கிரஸும் வேண்டாம்.. தேர்தலும் வேண்டாம்.. ஆளை விடுங்க என தப்பி ஓடி பாஜகவில் அடைக்கலாமாகிவிட்டார் அக்சய் காந்தி பம் என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications