திரையில் மாஸ் ஹீரோயின்..தரையிலும் ஜொலித்த ’தலைவி’ கங்கனா ரனாவத்! பாஜகவுக்கு இனித்த இமாச்சல பிரதேசம்!
சிம்லா: நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸை துடைத்தெறிந்திருக்கிறது பாஜக. அங்குள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். குறிப்பாக முதன்முறையாக இமாச்சலப் பிரதேசத்தில் களமிறங்கி இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்ட நால்வரும் வெற்றி பெற்று, இமாச்சல பிரதேசத்தை பாஜக முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

ஏழாம் கட்ட வாக்குப்பதிவு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் காலை 7:00 மணிக்கு தொடங்கி நிலையில் 1ஆம் தேதி 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6.30 மணி அளவில் இந்தியாவின் பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்கள் பொதுமக்களிடம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் பெரும்பாலான நிறுவனங்களின் கணிப்பு பாஜகவே மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதுதான் 350 தொகுதிகளில் இருந்து 400 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றே கூறியிருந்தன.
மேலும் 125 லிருந்து 175 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என ஊடகங்கள் கணித்தன அதே நேரத்தில் ஒரு சில ஊடகங்கள் 300 தொகுதிகளுக்கு மேல் பெற்று காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனக் கூறின. இந்நிலையில் கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும், தேர்தல் முடிவுகள் பாதகமாகவே இருக்கிறது. தனிப்பெரும்பன்மை இல்லாமல் பாஜக ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளை நம்பியே இருக்கிறது.
இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக முழுமையாக வெற்றி பெறுமா என எதிர்பார்த்த நிலையில் பாஜக அச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. அங்குள்ள நான்கு தொகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில் 14 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது தொடர்ந்து 17ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் தான் முதன்முறையாக களமிறங்கி இருக்கிறார் பாலிவுட் நடிகையான கங்கனா, மாண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட அவர் காங்கிரஸின் விக்கிரமாதித்ய சிங்கை எதிர்கொண்டார். இதே போல காங்க்ரா மக்களவைத் தொகுதியில் பாஜகவின் ராஜீவ் பரத்வாஜும் காங்கிரசின் ஆனந்த் சர்மாவும் நேருக்கு நேர் மோதினர். ஹமீர்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் காங்கிரசின் சட்பால் சிங் ரைஷாடா தேர்தலில் களம் கண்டனர்.
இதேபோல மாநிலத்தின் தலைநகரான சிம்லா மக்களவைத் தொகுதியில் சுரேஷ்குமார் காஷ்யாப்பும் காங்கிரசின் வினோத் சுல்தான் புரியும் களம் கண்டனர். மாநிலத்தில் இருக்கும் நான்கு தொகுதிகளிலும் பாஜகவும் காங்கிரசும் நேருக்கு நேர் களம் கண்டன. இந்நிலையில் அங்குள்ள நான்கு தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்று இருக்கிறது. அங்கு காங்கிரஸுக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. மாண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங்கை விட சுமார் ஒன்றை ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். இதே போல் ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், காங்க்ரா தொகுதியில் ராஜீவ் பரத்வாஜ், சிம்லாவில் சுரேஷ்குமார் காசியாப் ஆகிய பாஜக வேட்பாளர்கள் பெரிய வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்று, முழுமையாக இமாச்சலை கைப்பற்றியுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications