பிரதமர் மோடியுடன் தம்பிதுரை சந்திப்பு... ஓகி புயல் நிவாரணம் தர கோரிக்கை!
புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார். இதே போன்று நிதியமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து நிவாரணத்தை கணக்கிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இன்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : லோக்சபா 15 நிமிடங்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். ஓகி புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். தமிழக முதல்வர் இது குறித்து பிரதமரிடம் பேசுமாறு என்னிடம் கூறினார் அதனால் அவரை சந்தித்து பேசினேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓகி புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் கன்னியாகுமரியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர். நிவாரணப் பணிக்கு மத்திய அரசின் நிதியும் தேவைப்படுகிறது. அதனால் தான் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினேன்.
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள், சிலர் ஆங்காங்கே கரை ஒதுங்கி இருக்கின்றனர். மீனவர்களை கண்டுபிடிக்க கடற்படையின் உதவி தேவை என்று கோரியிருக்கிறேன். பிரதமர் இதற்கு ஆவண செய்யுமாறு கூறினார், அப்போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அங்கு இருந்தார் அவர் இது குறித்து முதல்வரிடம் பேசி இருப்பதாக சொன்னார் மீனவர்களுக்குத் தேவையான உதவிகள் ஆவண செய்யப்படும் என்றார் ராஜ்நாத்சிங்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று நிதியமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து நிவாரணத்தை தர மத்திய குழுவை அனுப்புவதாக சொல்லி இருக்கிறார். புயல் நிவாரணம் தருவதாகவும் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை இரட்டை இலையின் வெற்றி உறுதி. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் நிச்சயம் வெற்றி பெறுவார்,அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை இருக்கிறது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications