பிரபல லாட்டரி அதிபர் மார்டடினின் மகன் பாஜகவில் இணைந்தார்
டெல்லி: லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் டெல்லியில் பிஜேபி பொதுச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளார்.
லாட்டரி அதிபராக ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் மார்ட்டின். 2003ல் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவிலும் இவரது சாம்ராஜ்யம் பரவியது. சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இவருக்கு ஆதிக்கம் உண்டு

2 தமிழ் திரைப்படங்களை மார்ட்டின் தயாரித்துள்ளார். அவற்றில் ஒன்று கருணாநிதி வசனத்தில் தயாரான இளைஞன் படம். 2010ல், கோவையில் நடந்த தமிழ் மாநாட்டிலும் மார்ட்டின் பங்கேற்றுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் அக்கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த மார்ட்டின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதிமுகவுடன் நெருங்கத் தொடங்கினார்.
2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நிலமோசடி வழக்கில், மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் மார்ட்டின் மீது வழக்குகள் தொடுக்கப் பட்டது. மார்ட்டின் மீது நில அபகரிப்பு, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை உள்பட அடுத்தடுத்து 14 வழக்குகளை போலீசார் தொடர்ந்தனர்.
இந்த 4 வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, இவர் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தை பாய்ச்சி மீண்டும் கைது செய்தனர். இந்த நிலையில், மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து தன் மீது போட்டப்பட்ட 13 வழக்குகளில் ஜாமீன் பெற்ற மார்ட்டின், கடைசியாக, கொடுமுடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பதிவான வழக்கில், கொடுமுடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் பெற்றார். இந்த ஜாமீன் உத்தரவை மார்ட்டினின் வழக்கறிஞர்கள் கோவை மத்திய சிறையில் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, 7 மாதங்களுக்கு பிறகு கோவை சிறையில் இருந்து மார்டின் விடுதலை செய்யப்பட்டார்.
மார்ட்டின் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள சட்டவிரோத லாட்டரி தொழிலின் சூத்திரதாரி என்று கூறப்படுவதுண்டு. இவருக்கு 2 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் கூறுகையில், எனது கணவர் சட்டத்துக்கு உட்பட்டுதான் லாட்டரி தொழில் செய்து வந்தார். கர்நாடகாவில் நடந்த சட்டவிரோத லாட்டரி தொழிலில் அவருக்கு தொடர்பில்லை என்று கூறினார்.
இதற்கிடையே, லீமா ரோஸ் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு பி.ஜே.பி-யில் சேர மார்ட்டின் முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்க்கக் கூடாது என தமிழக பி.ஜே.பி-யினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த முயற்சி தடுத்து நிறுத்தப் பட்டது.
இந்த சூழ்நிலையில் மார்ட்டினின் மகன் சார்லஸ் டெல்லியில் இன்று பி.ஜே.பி பொதுச் செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications