தனித்தே போட்டி- மமதாவின் அதிரடி- அடம்பிடித்த காங்கிரஸுக்கு பொளேர் அடி- மே.வங்க நிலவரம் இதுதான்!
கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் "இந்தியா" கூட்டணி உடைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸும் இடதுசாரிகளும் வழக்கம் போல கூட்டணி அமைத்து தேர்தலில் மண்ணை கவ்வும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்றது. ஆனால் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என 4 முனைப் போட்டி ஏற்பட்டது.

மே.வங்கம் 2019 லோக்சபா தேர்தல்: 2019 தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றது. பாஜக, 18 இடங்களைக் கைப்பற்றி மிரட்டல் வெற்றியைப் பெற்றது. 2014 தேர்தலில் பாஜக வெறும் 2 இடங்களைத்தான் வென்றிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 இடங்கள் கிடைத்தன. மேற்கு வங்கத்தை கோட்டையாக வைத்திருந்த இடதுசாரிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத பரிதாப நிலைமைதான் ஏற்பட்டது. 2019 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 43.69% வாக்குகளையும் பாஜக 40.64% வாக்குகளையும் பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 5.67%, சிபிஎம்-க்கு 6.34% வாக்குகள் கிடைத்தன.
மே.வங்கம் 2021 சட்டசபை தேர்தல்: 2021-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 215 இடங்களை வென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 48.02% வாக்குகளைப் பெற்றது. 2016-ம் ஆண்டு வெறும் 3 இடங்களில் வென்றிருந்த பாஜகவோ 77 இடங்களை கைப்பற்றியது. 2021 தேர்தலில் பாஜகவுக்கு மொத்தம் 37.97% வாக்குகள் கிடைத்தன. ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- சிபிஎம் (இடதுசாரிகள்) கூட்டணி அமைத்தும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. சிபிஎம்-க்கு 4.73% வாக்குகளும் காங்கிரஸுக்கு 2.93% வாக்குகளும்தான் கிடைத்தன.
வெல்லும் வாய்ப்பை தொலைத்த காங்கிரஸ்: இந்த பின்ணியில் மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் வெல்லும் குதிரைதான் திரிணாமுல் காங்கிரஸ். வெல்லக் கூடிய குதிரை மீது சவாரி செய்து வெற்றியை அறுவடை செய்யக் கூடிய வாய்ப்பாகாவே காங்கிரஸுக்கு "இந்தியா" கூட்டணி என்ற கேடயம் கிடைத்தது. "இந்தியா" கூட்டணி என்ற கேடயத்தின் கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கொடுக்கிற தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஜெயிக்கக் கூடிய அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி உருவாக்கி இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இன்னும் கிபி, கிமு ஒரு காலத்தில் நாங்கள் எல்லாம் என வசனம் பேசிக் கொண்டு அத்தனை தொகுதி வேண்டும்; இத்தனை தொகுதி வேண்டும் என கள நிலவரத்தை உள்வாங்காமலேயே கரடியாய் கத்தினால் பயனேதும் இல்லை என்பதைத்தான் மேற்கு வங்கத்தில் தனித்தே போட்டியிடுவோம் என்கிற மமதா பானர்ஜியின் பதிலடி சொல்லுகிறது.
ஆதாயம் திரிணாமுல், பாஜகவுக்கு: மமதா பானர்ஜியின் இந்த அறிவிப்பு மூலம் திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவுக்குதான் ஆதாயம். காங்கிரஸுக்கோ ஒன்று அல்லது 2 இடத்தில் வெல்லக் கூடிய வாய்ப்பை தொலைத்ததுதான் மிச்சம். திரிணாமுல் காங்கிரஸ் அல்லது பாஜகவின் கணக்கில்தான் காங்கிரஸ் போட்டியிடும் அத்தனை தொகுதிகளும் சேரப் போகிறது என்பது யதார்த்தம்.
காங்கிரஸின் தற்கொலை முடிவு: மேற்கு வங்க அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் சொல்வதைப் போல, என்னதான் "இந்தியா" கூட்டணியில் மமதா இடம் பெற்றிருந்தாலும் கூட என்னதான் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே வெட்டு குத்து ஜெயில் வழக்கு நடந்தாலும் ஒருவித மென்மையான நட்பிழை இருக்கத்தான் செய்கிறது. மத்தியில் பாஜக- மாநிலத்தில் திரிணாமுல் என்பது தொடரவே செய்ய வேண்டும் என்கிற மறைமுக அஜெண்டா எப்போதும் போல நீடிக்கவே செய்யும். காங்கிரஸ் தன்னந்தனியே நடுத்தெருவில் நின்று தற்கொலை செய்கிற முடிவாகத்தான் திரிணாமுல் காங்கிரஸிடம் இருந்து விலகி இடதுசாரிகளுடன் இணைவது என்கிற நிலைப்பாடு அமையும் என்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications