ஆபாச படத்தால் விபரீதம்.. தங்கையை சீரழித்து கொன்ற சிறுவன்.. மகனை காப்பாற்ற 2 மகள்களுடன் உதவிய தாய்
போபால்: மத்திய பிரதேசத்தில் இரவு நேரத்தில் ஆபாச படம் பார்த்து தங்கையை பலாத்காரம் செய்து 14 வயது சிறுவன் கொலை செய்தார். இதுபற்றி அறிந்த சிறுவனின் தாய் தனது 2 மகள்களுடன் சேர்ந்து கொலையை மறைக்க நாடகமாடி தற்போது போலீசில் சிக்கி உள்ள நிலையில் கொடூர சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாவட்டம் ரேவா மாவட்டம் ஜாவா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவன் 13 வயது சிறுவன். இவன் தனது பெற்றோர், 17 மற்றும் 18 வயது நிரம்பிய அக்காள் மற்றும் 9 வயது தங்கையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் கடந்த 24ம் தேதி சிறுவனின் வீட்டு அருகே அவனது 9 வயது தங்கை இறந்து கிடந்தார். அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி குடும்பத்தினரிடம் கேட்டபோது வீட்டு முற்றத்தில் படுத்து தூங்கிய சிறுமியை விஷப்பூச்சி கடித்ததாகவும், இதனால் சிறுமி இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர்கள் சம்பவம் குறித்து ஜாவா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது போலீசாரிடம் அவரது குடும்பத்தினர் விஷப்பூச்சி கடித்து தான் சிறுமி இறந்ததாக தெரிவித்தனர். ஆனாலும் போலீசாருக்கு தொடர்ந்து சந்தேகம் இருந்து வந்தது. இதற்கு காரணம் அவர்கள் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த தாய், 2 அக்காள், அண்ணனான 14 வயது சிறுவன் அனைவரும் விஷப்பூச்சி கடித்து தான் சிறுமி இறந்ததாக கூறினாலும, அவர்கள் சில விஷயங்களை முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தது தான்.
இதற்கிடையே தான் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்தது. அதில் சிறுமி பலாத்காரம் செய்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 13 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது தான் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக ரேவா மாவட்டம் எஸ்பி விவேக் சிங் கூறியதாவது:
‛‛ஜாவா போலீஸ் எல்லைக்குப்பட்டுள்ள பகுதியில் 9 வயது சிறுமி இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சிறுமி பலாத்காரத்துக்கு பிறகு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிறுமியை அவரது அண்ணன் 13 வயது சிறுவன் தான் பலாத்காரம் செய்து கொன்றுள்ளான். ஏப்ரல் 24ம் தேதி சிறுவன் செல்போனில் ஆபாசபடம் பார்த்த பிறகு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.
இதுபற்றி தந்தையிடம் கூறுவதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் கழுத்தை நெரித்து கொன்றுள்ளான். இதுபற்றி அறிந்த சிறுவனின் தாய் (இறந்த சிறுமிக்கும் தாய்) தனது 2 மகள்களுடன் சேர்ந்து கொலையை மறைத்து மகனை காப்பாற்ற நினைத்தனர். இதையடுத்து சிறுமியின் உடலை முற்றத்துக்கு கொண்டு வந்து வைத்து விஷப்பூச்சி கடித்து இறந்ததாக நாடகமாடியது தெரியவந்துள்ளது'' என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக 9 வயது தங்கையை பலாத்காரம் செய்து கொன்றதாக 13 வயது நிரம்பிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கொலையை மறைக்க உதவியதாக சிறுவனின் தாய், 2 சகோதரரிகளும் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இதுதொடர்பாக ஜாவா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications