கிளம்பிய பூதம்! மபியில் ஓட்டு எண்ணும் தேதிக்கு முன் திறக்கப்பட்ட தபால் ஓட்டு பெட்டிகள்? வீடியோ
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே ‛ஸ்ட்ராங்' அறையில் பணியாளர்கள் தபால் ஓட்டு பெட்டிகள் திறந்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018 ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. கமல்நாத் முதல்வரான நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து ஆட்சியமைத்த ஓராண்டில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்த நிலையில் மீண்டும் பாஜக அரியணை ஏறியது. சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் 5 ஆண்டு சட்டபை காலம் முடிவுக்கு வரும் நிலையில் கடந்த 17 ம் தேதி ஒரே கட்டமாக அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக, காங்கிரஸ் இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது. இருகட்சியின் தலைவர்களும் தொடர்ந்து தீவிர பிரசாரம் செய்து வந்தனர். இதையடுத்து கடந்த 17 ம் தேதி சட்டசபை ஒரே கட்டமாக 230 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் மொத்தம் 76.22 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.
இதையடுத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. டிசம்பர் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே கலெக்டர் மற்றும் பணியாளர்கள் தபால் ஓட்டு பெட்டிகளை திறந்துள்ளதாக வீடியோ வெளியாகி இருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணமாகும். மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்ட கலெக்டர் கிரீஷ் உள்பட சிலர் பாதுகாப்பு அறைக்குள் சென்று தபால் வாக்குகள் உள்ள பெட்டிகளை திறப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளதோடு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளது. மேலும் முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, ‛‛இது மிகவும் சீரியஸான மேட்டர். இந்த குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்கும்படியும், இடையூறு நடக்காமல் கவனமாகவும் இருக்க வேண்டும்'' என கேட்டு கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் பாலகாட்டில் தபால் ஓட்டுக்கான நோடல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் கோபால் சோனி கூறுகையில், ‛‛இசிபிபிஎஸ் (எலக்ட்ரானிக்லக் டிரான்ஸ்மிட்டட் போஸ்டல் பேலட் சிஸ்டம்) வைத்து தபால் ஓட்டுக்களை 50 மூட்டைகளாக வரிசைப்படுத்துவது பொதுவான நடைமுறை. இந்த பணி என்பது கண்காணிப்பு கேமராக்களின் முன்பே நடைபெறுகிறது. அதோடு வாசலில் காவலர்கள் உள்ளனர்'' என்றார். இந்த சம்பவம் மத்திய பிரதேச தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே புயலை கிளப்பி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications