திக்திக் சர்வே.. நூலிழையில் காலியாகும் ஆட்சி.. பாஜவுக்கு ஷாக்! மத்திய பிரதேசத்தை வெல்லும் காங்கிரஸ்
போபால்: மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜகவை மயிரிழையில் வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கலாம் என புதிய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த மாநிலத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2018ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மாறாக 114 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருமாறியது. பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி பாஜக அல்லாத பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. கமல்நாத் முதல்வரானார்.
ஆனால் முதல்வர் பதவி கிடைக்காததால் தற்போதைய மத்திய அமைச்சரான ஜோதிர்ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பாஜக அரியணை ஏறியது. சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் அங்கு முதல்வராக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநில சட்டசபையின் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே தான் வரும் சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் ‛கிரவுண்ட் ஜீரோ ரீசார்ஜ்' எனும் அமைப்பு மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து கருத்து கணிப்பை மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மொத்தம் 160 தொகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின்படி மத்திய பிரேதேச சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 43 சதவீத ஓட்டுக்களை பெற்று 126 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
மாறாக பாஜகவுக்கு இந்த கருத்து கணிப்பு அதிர்ச்சியை அளித்தாலும் கூட அந்த கட்சியும் 100 தொகுதிகளை கைப்பற்றலாம் என கூறப்பட்டுள்ளது. ஆட்சியை பிடிக்க 116 தொகுதிகளில் வெல்ல வேண்டிய சூழலில் பாஜக 100 தொகுதிகள் வரை ஜெயிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு பாஜக 41 சதவீத ஓட்டுக்களை அறுவடை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மற்றவர்கள் 16 சதவீத ஓட்டுக்கள் பெற்று 4 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ‛கிரவுண்ட் ஜீரோ ரீசார்ஜ்' கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தற்போதைய கணிப்பை விட காங்கிரஸ், பாஜக கட்சிகள் 2 சதவீதம், கூடுதலாக வாக்குகள் பெற்றால் இன்னும் 5 தொகுதிகளில் கூடுதலாக வெற்றி பெறலாம் எனவும், அதேவேளையில் 2 சதவீத ஓட்டுக்களை குறைவாக பெற்றால் அவர்கள் வெல்லும் இடத்தில் 5 தொகுதிகள் குறையலாம் எனவும் ‛கிரவுண்ட் ஜீரோ ரீசார்ஜ்' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications