Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைக்கு மேலே துள்ளி குதிக்கும் எலிகள்..ம.பி ஹாஸ்பிடலில் அதிர்ச்சி!வீடியோவை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் எலிகள் துள்ளிக் குதித்து விளையாடும் வீடியோ வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி ஓடி விளையாடும் வீடியோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.

இந்திய அளவில் மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் வட மாநிலங்களில் மருத்துவ வசதிகள் அந்த அளவுக்கு கொடுக்கப்படுவதில்லை.

Madhya Pradesh Hospital Rat

எய்ம்ஸ் போன்ற பெரிய மருத்துவமனைகள் இருந்தாலும் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகத் தான் இருக்கும். அரசு மருத்துவமனைகள் என்றில்லாமல் தனியார் மருத்துவமனைகளில் கூட வசதிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் பலியாவது மற்றும் எலிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தொடர் புகார்கள் வருகின்றன.

நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பது, நோயாளிகளை எலிகள் கடிப்பது என ஆண்டுக்கு இரண்டு செய்திகளாவது வந்து விடும். அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்லா பகுதியில் தனது குழந்தையை ஒருவர் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு குழந்தைகள் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமும் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் தான் நேற்று அவரைப் பார்ப்பதற்காக அவரது தந்தை மருத்துவமனைக்கு வந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு தலைக்கு பின்னேயும் மருத்துவமனை முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட எலிகள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் எந்தவித பதட்டமும் அடையாமல் இங்கு நிறைய எலிகள் இருக்கிறது.

அதனை விரட்ட நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. எலிகள் கடிக்கவில்லை என சந்தோஷப்படுங்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை உயரதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது.

மருத்துவமனை சுகாதாரமின்றி இயங்குவதால் எலிகள் உலா வருவதாகவும், மேலும் அடிக்கடி நோயாளிகளை அவை கடித்து விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனையை முறையாக பராமரிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சுகாதாரத்தை பேண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பேசி உள்ள அம்மாநில காங்கிரஸ் பிரமுகரான அனுராக் சிங், மருத்துவமனைகள் மிக மோசமாக இருக்கின்றன. இந்த மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து எலிகளை கட்டுப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அது கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு.. ஆனால் நிலைமை இன்னும் மாறவில்லை.. இனியாவது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+