"நிழல்" நிஜமாகுது.. "ஆணாக" மாறப்போகும் பொண்ணு யார்னு பாருங்க.. "ஆபரேஷனுக்கு" அனுமதியும் வாங்கியாச்சு
போபால்: பெண் காவலர் ஒருவர் மத்திய பிரதேச மாநில மக்களின், ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார்.. யார் அவர்? என்ன நடந்தது?
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. அந்த பெண் போலீஸின் பெயர் லலிதா குமாரி. 30 வயதாகிறது.. இவர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில வருஷங்களுக்கு முன்பு, திடீரென தன்னுடைய உடம்பில் ஆண் தன்மை இருப்பதை போல இவர் உணர்ந்துள்ளார்.. பிறகு அதற்கான பாலியல் அறுவை சிகிச்சையும் செய்து ஆணாக மாறவும் முடிவு செய்தார்..
அதற்காக மாநில உள்துறை அமைச்சகத்திடமும் முன் அனுமதியும் பெற்றார். பெண் கான்ஸ்டபிள் ஒருவருக்கு, ஆணாக மாறுவதற்கான ஆபரேஷன் செய்து கொள்வதற்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி தந்தது இதுதான் முதல்முறை என்கிறார்கள். இதற்கு பிறகு, பிறகு லீவு எடுத்து கொண்டு, லலிதா குமாரி மும்பையில் உள்ள ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார்.
லலிதா லலித் ஆனார்: கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேல் 3 கட்டமாக அந்த ஆபரேஷன் நடந்தது. இந்த ஆபரேஷன் முடிந்ததுமே திரும்பவும் வேலைக்கு வந்தார்.. ஆனால் இப்போது அவர் பெயர் லலிதா குமாரி இல்லை.. "லலித்" என்று பெயர் மாறியது..
ஆண் போலீசாக வேலையில் வந்து சேர்ந்தார்... மராட்டிய போலீஸ் அவருக்கு ஆண் போலீஸ் அந்தஸ்து வழங்கியது. பிறகு லலித்துக்கு திருமணமும் முடிந்தது.. பொதுவாக ஆண், பெண் இருபாலாரும் ஆபரேஷன் செய்து கொண்டு வாழ்வது இயல்பான விஷயம்.. ஆனால், பெண்ணாக இருந்து ஆணாக மாறி, இப்போது ஒரு பெண்ணையே கல்யாணம் செய்துகொண்டார் லலிதா, ஸாரி லலித்..
மாநில அரசு: இப்போது விஷயம் என்னவென்றால், இதேபோல பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வேண்டும் என்று இன்னொரு கோரிக்கை மத்திய பிரதேச மாநிலத்தில் எழுந்ததையடுத்து, அம்மாநில அரசும் ஆபரேஷனுக்கு அனுமதி தந்துள்ளது. கோரிக்கை விடுத்தவரும் ஒரு பெண் போலீஸ் ஆவார்.
தீபிகா கோத்தாரி என்பது அவரது பெயர்.. மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் திடீரென தன்னை குறித்தான பாலின அடையாள சிக்கல்களை அதிகம் எதிர்கொண்டிருக்கிறார்.. பெண்ணாக பிறந்து வளர்ந்தாலும், ஆணாக தன்னை உணர ஆரம்பித்ததன் அடிப்படையிலேயே இப்படியான நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டார். இதையடுத்து, பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாக ஆணாக மாறிவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்.
ஆபரேஷன்: ஆனால், தான் ஒரு அரசு ஊழியர் என்பதால், தான் மேற்கொள்ளவிருக்கும் அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான தேவை போன்றவற்றை விரிவாக விளக்கி, மாநில அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
அரசு ஊழியர்களின் பாலின் மாற்ற கோரிக்கையை அனுமதிப்பது தொடர்பாக தெளிவான அரசு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எதுவுமே இப்போதைக்கு நடைமுறையில் இல்லை.. அதேசமயம், தன்னுடைய பாலினத்தை உறுதி செய்யும் அந்த ஊழியரின் கோரிக்கையையும் அரசால் தவிர்க்க முடியாது.
அரசிடம் அனுமதி : இதே மத்திய பிரதேசத்தில், கடந்த 2021-ல் ஆர்த்தி யாதவ் என்ற பெண் போலீஸ் இப்படித்தான் விண்ணப்பித்து, ஆபரேஷனுக்கு அனுமதி பெற்றிருந்தார். அதனால்தான், இதே வழிமுறையை தீபிகாவும் மேற்கொண்டார்..
கடந்த வருடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், அரசின் அனுமதி இப்போது கிடைத்துவிட்டதாம்.. இருந்தாலும், பெண் ஊழியர்களுக்கான பிரத்யேக சலுகைகள் எதுவுமே இனி தீபிகாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்று உத்தரவில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஆபரேஷனுக்கு தீபிகா தயாராகி வருகிறார்.. ஆபரேஷனை முடித்துக்கொண்டு எந்த பெயரில் திரும்பி வரப்போகிறாரோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications