"போபாலி என்றால் ஓரினச்சேர்க்கையாளர்" காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் சர்ச்சை.. கொந்தளித்த ம. பி மக்கள்
போபால்: மத்திய பிரதேச தலைநகரான போபாலை சேர்ந்த மக்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்தது போபால் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தொலைக்காட்சிகளுக்கும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
இதனிடையே அண்மையில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற விவேக் ரஞ்சன் அன்லைன் சேனலுக்கு பேட்டியளித்தார்.

நான் போபாலில் வளர்ந்தேன்! ஆனால் போபாலி இல்லை
அப்போது அந்த நேர்காணலை எடுத்தவர் நீங்க போபாலியா என இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியிடம் வினவினார். அதற்கு பதிலளித்த அவர், "நான் வளர்ந்தது எல்லாம் போபாலில்தான். ஆனால் நான் போபாலி இல்லை. அதற்கு காரணம் போபாலி என்பதற்கு வேறொரு அர்த்தமும் உள்ளது. இதை போபாலை சேர்ந்த யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம்.

போபாலி என்றால் ஓரினச்சேர்க்கையாளர்
போபாலி என்றால் பொதுவாக ஓரினச்சேர்க்கையாளர் என்று அர்த்தம்." என்று கூறினார். போபால் குறித்து விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்த கருத்து பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என போபால் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி போபாலில் வசிக்கும் 25 லட்சம் பேரை அவமானப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்திட்டு வருகின்றனர்.

திக் விஜய் சிங் கண்டனம்
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் கருத்து அவரது தனிப்பட்ட அனுபவமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண போபால்வாசிக்கு அதுபோல் கிடையாது. கடந்த 1977 முதல் நான் போபாலிகளுடன் உள்ளேன். உங்களுக்கு நேர்ந்த அனுபவம் எனக்கு இல்லை. நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நீங்கள் அதை சந்தித்து இருக்கலாம்." எனக்குறிப்பிட்டு இருக்கிறார்.

விவேக் ரஞ்சன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
இதுகுறித்து தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் அமைச்சர் பி.சி.சர்மா, போபால் குறித்து தனது குறித்து விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கலாச்சாரம், கலை, வரலாற்று பெருமை வாய்ந்தது போபால். போபாலிகளை ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறியதன் மூலம் அவர் குற்றம் இழைத்துவிட்டார்." எனக் கூறி இருக்கிறார். இதேபோல் இந்திய தேசிய மாணவர் அமைப்பினர் விவேக் ரஞ்சன் மன்னிப்புக்கோர வலியுறுத்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
Recommended Video

மத்திய பிரதேச முதலமைச்சரிடம் கோரிக்கை
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை காண போலீசாருக்கு விடுமுறை அறிவித்த மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, விவேக் ரஞ்சனின் இந்த கருத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸ் ஊடகப்பிரிவு துணைத் தலைவர் பூபேந்திர குப்தா தெரிவிக்கையில், "25 லட்சம் போபால் மக்களை இழிவுபடுத்திய விவேக் ரஞ்சனுடன் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் எந்த பொதுமேடைகளிலும் பங்கேற்கக்கூடாது" என கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications