டிசம்பர் 3ல் கிளைமேக்ஸ்.. பாஜக கோட்டையில் அடித்து முன்னேறிய காங்கிரஸ்.. மபியில் திக்.. நடப்பது என்ன?
போபால்: 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய பிரதேசத்தில் நடக்கும் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.

இதற்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன,
அதில்,
மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்கும்
மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடக்கும்
ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடக்கும்
சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக தேர்தல் நடக்கும்)
தெலங்கானா - நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடக்கும்
5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 3ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக ஆட்சி: மத்திய பிரதேச சட்டசபை கிட்டத்தட்ட தமிழ்நாடு போன்றது ஆகும். இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது.
சிவராஜ் சிங் சவுகான் அங்கே ஆட்சி அமைத்தார். அதன்பின் கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்;.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது. அதன்பின் 1 வருடத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிந்தியா தலைமையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.
புதிய நிலவரம் என்ன?: தற்போது அங்கே 4 முறை சவுகான் முதல்வராக இருந்துவிட்டார். கடந்த முறையே ஆபரேஷன் கமலா மூலம்தான் ஆட்சிக்கு வந்தார். அதனால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக யோசிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பெண்களுக்கு மாதம் உதவிதொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மூலம் அடித்து மேலே வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் பாஜக அங்கே சவுகானுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதே சிரமம் என்கிறார்கள். அவரை மத்திய அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டு.. புதுமுகத்திற்கு வாய்ப்பு கொடுத்து தேர்தலை எதிர்கொள்ள பாஜக நினைக்கும் என்று கூறப்படுகிறது. கர்நாடகாவில் எடியூரப்பாவை ஓரம் கட்டியது போல இங்கே சவுகானை ஓரம்கட்ட பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications