திடீர் ட்விஸ்ட்.. சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுதலை செய்யுமாறு அவமதிக்கப்பட்ட நபர் கோரிக்கை!
போபால்: தன் மீது சிறுநீர் கழித்த பாஜகவை சேர்ந்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்குமாறு, பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரே அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கள் ஊரின் பண்டிட்டான பிரவேஷ் சுக்லாவை விடுவித்து விடலாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா, போதையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் முகத்தில் சிறுநீர் கழித்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிப்பு: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பாஜகவை சேர்ந்தவர் என்பதும் அவர் பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருபவர் என்றும், பிற பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சினர் பழங்குடியினரை அவமதித்தது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ம.பி முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் பாய்ந்தது. அதன்பின் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த அவரது வீட்டையும் அதிகாரிகள் புல்டோசர்கள் மூலம் இடித்தனர்.

காலை கழுவிய முதல்வர்: இதைத்தொடர்ந்து, முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவரின் காலை கழுவினார். பின்னர் அவருக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இனிப்பு ஊட்டியதோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞருக்கு ரூ.6.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இது தொடர்பாக சித்தி மாவட்ட ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில், சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட தஸ்மத் ராவத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையாகவும், ரூ.1.50 லட்சம் வீட்டை புனரமைக்கும் செலவுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபரே குற்றவாளியை விடுதலை செய்ய கோரிக்கை: இந்த நிலையில் திடீர் திருப்பமாக, பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் தஷ்மத் ராவத், தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா தவறை உணர்ந்ததால் அவரை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். சிறையில் உள்ள பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா, இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரவேஷ் சுக்லா செய்த மோசமான செயலையும் மீறி அவரை ஏன் விடுதலை செய்யக் கோருகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "ஆம், அவர் தவறு செய்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட், அவரை விடுவிக்க அரசாங்கத்தை நாங்கள் கோருகிறோம்." எனத் தெரிவித்துள்ளார் அவமதிக்கப்பட்ட தஷ்மத் ராவத்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications