பெட் ரூமில் கணவனின் கழுத்தை பிடித்து.. மகளின் கையை தாய் இழுத்து.. .. இவரும் ஒரு பெண்ணா? ம.பி. வீடியோ
போபால்: தாலி கட்டிய கணவர் என்று மனைவியும் நினைக்கவில்லை.. சகமனிதன் என்ற மனிதாபிமானமும் இல்லை.. இந்த கொடுமை இத்தனை நாட்களாக நடந்தும்கூட, வீட்டில் யாருமே இதனை தடுத்து நிறுத்தவில்லையாம்.. சொந்த வீட்டிற்குள்ளேயே ஒருவர் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்.. இது தொடர்பான வீடியோவை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். என்ன நடந்தது மத்திய பிரதேச மாநிலத்தில்?
மத்தியபிரதேச மாநிலம் பன்னாவை சேர்ந்தவர் லோகேஷ் மஞ்சி.. லோகேஷூக்கு 30 வயதாகிறது. இவர் லோகோ பைலட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்தார்கள்.

ஆனால், நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் பெண்ணாக இல்லாவிட்டாலும், நல்ல குணமுள்ள பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.. பெண் வீட்டில் வசதி இல்லாவிட்டாலும், வரதட்சணையே வாங்காமல், அந்த திருமணத்தை செய்ய வேண்டும் என்பதில் லோகேஷ் உறுதியாக இருந்தார்.. ஏழைப் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, குணம்தான் முக்கியம் என்றும் தன்னுடைய வீட்டில் சொல்லிவிட்டார்.
வரதட்சணை வாங்காமல் திருமணம்
இறுதியில், அவர் எதிர்பார்த்தபடியே, பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த ஒருவரின் மகளான ஹர்ஷிதா ராய்க்வார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. அந்த பெண்ணிடம் ஒரு பைசாகூட வரதட்சணை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.. கடந்த 2023-ம் ஆண்டு இந்த திருமணம் நடந்துள்ளது.
கல்யாணத்துக்கு பிறகுதான் லோகேஷூக்கு பல ட்விஸ்ட்கள் ஒவ்வொன்றாக வந்தன.. "மனைவியாக நான் வந்துவிட்டதால், இனிமேல் உங்க அம்மாவை பார்க்க போகக்கூடாது" என்று ஹர்ஷிதா முதல் கண்டிஷனை போட்டார்.. இதைக்கேட்டு திடுக்கிட்ட லோகேஷ், அதை ஏற்றுக் கொண்டார்.. பிறகு, நண்பர்களை சந்திக்க போகக்கூடாது என்றார்.. அதையும் லோகேஷ் ஏற்றுக் கொண்டார்.
துண்டிக்கப்பட்ட உறவுகள்
திருமணத்துக்கு பிறகு லோகேஷ் யாரையுமே சென்று சந்திக்காமல் இருந்ததால், லோகேஷை சந்திக்க அவரது நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.. ஆனால், வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களை அசிங்கப்படுத்தி துரத்தி விட்டுள்ளார் ஹர்ஷிதா..
மற்றொருபக்கம், தன்னுடைய கணவன் கைநிறைய சம்பாதிப்பதால், அடிக்கடி பணத்தை வாங்கி, தன்னுடைய அம்மா, தம்பிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒருகட்டத்தில் ஹர்ஷிதாவின் அம்மா, தம்பி என அனைவரும் , ஹர்ஷிதா வீட்டிலேயே தங்கியிருந்து அடிக்கடி பணம் கேட்டு லோகேஷை தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.
தங்க நகைகள் - மாமியார்
இதனால் லோகேஷூக்கு இன்னும் டார்ச்சர் அதிகமாகியிருக்கிறது.. என்னுடைய மகளுக்கு 3 பவுன் செயின் வாங்கி போடுங்க, 5 சவரன் நெக்லஸ் வாங்கி போடுங்க என்று மருமகனை துளைத்தெடுத்தார் ஹர்ஷிதாவின் அம்மா.. ஹர்ஷிதாவின் தம்பியும் எந்த வேலைக்கும் போகாமல், பணம் கேட்டு வாங்கி வந்துள்ளார்.
இந்த அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி, லோகேஷையே கை நீட்டி அடிக்கும் அளவுக்கு சென்றுவிட்டார் ஹர்ஷிதா.. நீ பைலட் என்றால், வீட்டு வேலை எதுவும் செய்ய மாட்டாயா? என்று கேட்டு சரமாரி அடித்து உதைத்துள்ளார்.. நாளுக்கு நாள் வீட்டில் , லோகேஷை அடித்து தாக்குவதையே வழக்கமாக வைத்துள்ளார் ஹர்ஷிதா.. இதனால் பொறுமை இழந்த லோகேஷ், மனைவி தன்னை ரூமில் வைத்து தாக்குவதை, செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துக் கொண்டார்.
ஐயா, என்னை காப்பாத்துங்க
அந்த வீடியோவை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்.. வீடியோவை பார்த்து போலீசாரே ஆடிப்போய்விட்டார்கள்.. அதில், ஹர்ஷிதா லோகேஷின் கன்னத்தில் பளார், பளார் என்று அறைகிறார். உடனே மாமியார் அங்கே ஓடிவந்து மகளை தடுக்கிறார், ஆனாலும் ஹர்ஷிதா, லோகேஷின் மண்டை மீதே மடார் என்று ஒரு போடு போட்டார்.
இதனால் வலி பொறுக்க முடியாத லோகேஷ், கையெடுத்து கும்பிட்டு தன்னை விட்டுவிடு என்று கெஞ்சுகிறார். ஆனால், அந்த பெண் தன்னுடைய காலிலேயே லோகேஷின் முகத்திலேயே எட்டி எட்டி உதைக்கிறார்.
இதைக்கண்டு போலீசார் வெலவெலத்து போய்விட்டனர்.. உடனே லோகேஷ், எப்படியாது என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டு, புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவங்கினர்.
கொசு மருந்து குடித்த மனைவி
இத்தனை நாள் ஏன் புகார் தரவில்லை என்று போலீசார் கேட்டனர்.. அதற்கு லோகேஷ், போலீசுக்கு போனால், தன் குழந்தையை கொலை செய்து விடுவதாக மனைவி மிரட்டியதால் தான் புகார் தரவில்லை.. ஒருமுறை புகார் தர துணிந்தபோது, கொசு மருந்தை குடித்துவிட்டு, மனைவி மிரட்டினாள்.. அதனால்தான் புகார் தரமுன்வரவில்லை' என்று பரிதாபமாக கூறினார்..
லோகேஷ் அளித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் போலீசார் இது தொடர்பான விசாரணையை துவக்கியிருக்கிறார்கள். ஹர்ஷிதா என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications